பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

167

கப்பல்....? கனவுப் பெண் 107 ஆயிரமாயிரம் மக்கள் கூட்டம். ஜீவனுள்ள உயிர்ப் பிராணிகள், அரசன், சாம்ராஜ்யம், படாடோபம், புலிக் கொடி, வெற்றி, வீரம். இன்னும் எத்தனையோ! . சமுத்திர ராஜன் பர்வதராஜனுடன் ஒத்துழைத்தால் எதிர்த்து என்னதான் செய்ய முடியும்? அரசனைக் காப்பாற்றவேண்டியது அவசியந்தான். ஆனால், அகோரமான அலைகளுக்கு மத்தியில யார் என்ன செய்ய முடியும்?

ராஜ மார்த்தாண்டன். வீரன், பலவான். நீந்திக் கொண்டு செல்லுகிறான், ஆனால் தன் இஷ்டப்படியல்ல. மிதப்புக் கட்டை மாதிரி நீருக்குமேல், பெரிய அலைகள் மூச்சுத் திணறும்படி வாரியடிக்கும் நுரைக்கு மேல், முகத் தைத் தூக்கிக்கொண்டு நீந்துகிறான். வாரி யிறைக்கும் நுரைத் திரையிலே ஒரு பெண்ணின் பாதம் தெரிகிறது. "ஊர்வசீ" 'அவள் தான் வருவாளே! வருகிறாளே!"தைரியமும் ஊக்கமும் சக்தியைக் கொடுக்கின்றன. நீந்துகிறான். எதிரிலே ஓர் உயரமான பாறை. தலை நிமிர்ந்து உச்சி யைக் காண முடியாத நெடும் பாறை! அதில் நின்று கொண்டால்... அவன் நீந்த வேண்டாம், அலை வேகமே இழுத்துச் செல்லுகிறது. அப்பா! இன்னும் ஒரு கை! எட்டிப் போடுகிறான்.