பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

168 புதுமைப்பித்தன் கதைகள் பின்புறம் இடி முழக்கம்போல் ஒரு ஹூங்காரம்! நட்சத்திரங்கள் கண்ணுக்குள் மின்னி மறைகின்றன. அப்புறம் ராஜ மார்த்தாண்ட சோழன் அல்லன்.- முங்கி மிதக்கும் ஒரு சரீரம்.... எவ்வளவோ நேரம் சென்றது. கண்களில் ஏன் இந்தச் சூரியன் இப்படித் தகிக்க வேண்டும்?....... யாரோ அணைந்திருக்கிறது மாதிரி ஒரு தோற்றம் தாயின் கனிவுடன் சற்று மேலோங்கி வளராத கன்னங்கள். கன்னத்தோடு சாய்ந்து... "அம்மா அ அ அ! என்ன ஹீன ஸ்வரம்! என்ன பலவீனம்/ வளர்ந்தும் கவிஞனின் கனவுபோன்ற கண்கள் அவனைக் கவனித் துச் சிரிக்கின்றன. திரும்புகிறான் - மாந் தளிரின் நிறம்! மனத்தில் சாந்தி யளிக்கக்கூடிய அழகு...... கூந்தல் கருத்துச் சுருண்டு ஆடையாக முதுகுப் புறத்தை மறைக்கின்றது? அதுதான் ஆடை! திடுக்கிட்டு எழ முயற்சிக்கிறான்; முடியவில்லை. அவள் கரங்கள் அவனை அணைத்துக்கொள்ளு கின்றன. உதட்டில் அவளுடைய மெல்லிய விரல்கள் பதிந்து, அவனைத் திரும்பவேண்டாம் என்று சமிக்ஞை செய் கின்றன. அவன் அரசன்! ராஜ மிடுக்கு! அவளோ தாதிப் பெண்/ "காலைப் பிடி"