பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

துன்பக் கேணி 17 குத் துரிதமாக வந்தார். அன்று முதல் இரண்டு நாட்கள் கொழும்பில் குதூகலம். ஸ்ரீமதி மாட் கிரௌன் குஷி யான பேர்வழி என்று அவர் கண்டு கொண்டார். ஸ்ரீமதி புதிய அனுபவத்தில் மிக்க ஆசையுள்ள கிரௌனிற்கு இது மிகவும் பிடித்தது. இருவரும் தோட் டத்திற்குப் பிரயாணமானார்கள். பங்களாவில் அவர்களுக்கு ஒரு தனியறை. மருதி அவளுக்குப் பணிவிடைக்காரி. ஸ்ரீமதி மாட் அசட்டுப் பேர்வழியல்ல. தோட்டங்களில் பிரம்மச்சாரிகள் கறுப்புப் பெண்களை எப்படி நடத்துவார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் அந்தப் 'போக்கிரி'யுடன் பழகுவதில் ஒரு உற்சாகம். உஷ்ணப் பிரதேசம் மதனனின் ஆஸ்தான மண்டபம் என்பது மேல்நாட்டு அபிப்பிராயம். எனவே, திரு. ஸ்மித்தும் ஸ்ரீமதி மாட் கிரௌனும் காதலர்கள் ஆனதில் அதிசயமில்லை. அப்பொழுது... சிறையிலிருந்து விடுபட்ட வெள்ளையன் நோராக ஊருக்குப் போகவில்லை. நேராக மாமனார் வீட்டிற்குச் சென்றான். அங்கு மருத்தியைக் காணாதது பெரும் ஏமாற்ற மாக இருந்தது. சிறையிலிருந்து வரும்பொழுதே அவன் மனது உடைந்துவிட்டது. மருதியின் நினைவு ஒன்றுதான் பசையாக இருந்தது அவனுக்கு. மாமனிடம் கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு மருதியைப் பார்ப்பதற்காக அவன் தேயிலைத் தோட்டத் திற்குப் புறப்பட்டான். வெள்ளையனும் மாமனைப் போல் மருதியின் இலட் சியமான தேயிலைத் தோட்டத்தைப் பற்றி நினைத்துக் கொண்டு சென்றான். 'வாட்டர் பால'த்திற்கு வரும் ஒரே மோட்டார் பஸ் சாயங்காலம் அங்கு வரும்.