பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172

172 புதுமைப்பித்தன் கதைகள் நான், உள் பக்கத்திற்குப் போகும் பாதையில் உட் கார்ந்திருந்தேன். என் மேஜையைக் கவனித்துக்கொண்டு உள்ளே போகிறான். மனத்திற்குள் "ரம் நீஸமான மவரு " என்று கீர்த்த னம்! உள்ளத்தை விட்டு வெளியேயும் சற்று உலாவியது. அப்பா! திரும்பி வருகிறான் கையில் பண்டங்களுடன். பரிமாறி யாகிவிட்டது. என்னிடம் வந்து பில் எழுதியாகிவிட்டது பழக்க வாசனை, யந்திரம் மாதிரி. ஸார்!" எல்லாம் ஸார், உங்கள் கைக்குட்டை கீழே விழுந்துவிட்டது அவன் குனிகிறான் எடுக்க. நானே எடுத்துக்கொண் டேன். மனிதன் தான் ! ஒரு ஐஸ் கிரீம்/" திரும்பவும் மிஷினாகி விட்டான்!