பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177

அகல்யை - 177 இதெல்லாம் அகல்யைக்குத் தெரியாது. ஏதோ ஒரு பெருங் குற்றத்தை. மனத்திற்கு ஒவ்வாத குற்றத்தைச் செய்தது போல் அவள் உள்ளம் கொந்தளித்துக் கொண் டிருந்தது. கெளதமருடைய தேற்றின. அன்று சென்றது அன்பும் காதலும் அவளைத் அவர்கள் தூங்க நெடு நேரம் "உனக்காக எல்லோரும் குருடராக இருக்கமுடியுமா?' என்றார் கௌதமர். 'ஆனால் ஆந்தையாகவா விழிக்க வேண்டும்?"என்றாள் அகல்யை. இந்திரன், தனது பைசாச உணர்ச்சியைப் பூர்த்தி செய்துகொள்ள எப்பொழுது சமயம் கிடைக்கும் என்று சுற்றி வருகிறான். விடியற்காலம் என்று கௌதமரை நினைக்கும்படி செய்து அவரை அப்புறப்படுத்தி விட்டால் பூர்த்தியாகும். ஆசை நடுநிசி. சந்திரனற்ற வானம். வெள்ளி மட்டும் கொஞ்சம் பிரகாசமாக, விடியற்காலம் என்று நினைக்கும் படி மங்கிய வெளிச்சத்தைத் தருகிறது. இந்திரன் கோழி மாதிரிக் கூவுகிறான். குடிசையினுள் அகல்யாவைத் தழுவியும் தழுவாமலும் உறங்குகிறார் கௌதமர். அவருக்கு எப்பொழுதும் பிசாசுத் தூக்கம் கிடையாது. கோழியின் குரல் கேட்டதும் காலைக் கடனைக் கழிக்க எழுந்து சிந்துக்கரைக்குச் செல்லுகிறார். அன்று நெடு நேரமாகத் தூங்காததினால் அகல்யைக்கு அயர்ந்த தூக்கம். பாதிக் கனவு, பாதித் தூக்கம். கணவனுடன் கொஞ் சித் தழுவி அவருடனேயே இருப்பதுபோல் கனவு. இந்தி ரன் பூனை போல மெதுவாக உள்ளே வருகிறான். ஆடைகள் சற்று நெகிழ்ந்து உறங்கும் அபலையைப் பார்க்கிறான். ஒரு மிருகத்தின் வேட்கை அன்று பூர்த்தியாயிற்று. - பாதிக் கனவு - உலகத்திலிருந்த அகல்யை விழிக்க வில்லை. கணவர் என்று நினைத்துத் தழுவுகிறாள். ஓரளவு இயற்கையின் வெற்றி.