பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185

சங்குத் தேவனின் தர்மம் 185 பிறகு இருவரும் பேசாமல் நடந்தனர். அந்த மறவன் கிழவியை நோக்குவதும், பிறகு குனிந்து யோசிப்பதுமாக நடந்தான். சற்று நேரத்தில் கிழவி, "அதோ கோயில் தெரியுது. நான் இனிமே போயிக்கிடுவேன்," என்றாள். 'ஏ ஆச்சி! நில்லு, ஒரு சமுசாரம்.நீ ஏழெதானே? இன்னா, இதெ வச்சுக்க முதல் பேரனுக்கு என் பேரிடு!" "நீங்க மகராசரா இருக்கணும். என்ன பேரு இட?" என்று சொல்லிக் கொண்டே, தனது எதிர்பாராத அதிர்ஷ் டத்தில் மதி மயங்கிக் கையை நீட்டினாள். சங்குத்தேவரின்னு?" கையில் வாங்கிய பணப் பை தொப்பென்று விழுந் "வேண்டாம், வேண்டாம்! என்னெ விட்டிருங்க, நான் ஓடிப்போரேன்?" என்று பதறினாள். தது. "இல்லே ஆச்சி, எடுத்துக்கோ! ஒன்னெ கண்ணானை ஒண்ணுஞ் செய்யலெ!" என்று கையில் கொடுத்து அனுப் பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள். 84 சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந் தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது. ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு ? இதுவும் ஒரு வேடிக்கெதான்!சங்குத் தேவனெக் கிழவி ......" என்று முனகிக்கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.