பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

காலனும் கிழவியும் வெள்ளைக் கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடு காடு என்று அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும்கூட கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். 'வெள்ளைக்கோயிலுக்குப் போறேன், என்றால், உலகத் திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக் குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்புநாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி வருகிறான். மாடத்தி தினசரி, அங்கு போய்த்தான் சுள்ளி பொறுக்கிக்கொண்டு திரும்புகிறாள். ஆனால் இப்படித் திரும்புகிறவர்களைப் பற்றி மட்டிலும் நினைவு வருகிறதில்லை போலும் அவ்வூர் வாசிகளுக்கு. அந்தப் பிரதேசத்திற்குச் சென்றும் வெறுங் கையுடன் திரும்பி வரும் நிலைமை ஒரே ஓர் ஆசாமிக்கு ஏற்பட்டது. அவர்தான் தர்மராஜா. இந்தச் சமாசாரத்தைப் பற்றி வெள்ளைக் கோயில் காரருக்குத் தெரியாது. ஏனென்றால், மருதாயி, புகையும் சுடுகாட்டுக்கும் சலசலக்கும் பனைவிளைக்கும் இடையில் உள்ள ஒரு குடிசையில் வசிக்கும் கிழவி. மருதாயிக்கு இந்த விளையில் பனைகள் சிறு விடலி களாக நின்றது தெரியும். அது மட்டுமா? கும்பினிக் காரன் பட்டாளம் அந்த வழியாகச் சென்றது எல்லாம் தெரியும். அந்தக் காலத்தில் மருதாயியின் பறையன் நல்ல