பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187

காலனும் கிழவியும் 187 செயலுள்ளவனாக இருந்தான். வஞ்சகமில்லாமல் குடிப் பான். மருதாயிக்கு அந்தக் காலத்திலே யிருந்த மிடுக்கு சொல்லி முடியாது. அறுப்புக்குச் சென்றுவிட்டு, களத் திலிருந்து மடி நிறையக் கொண்டுவரும் நெல்லை, கள்ளாக மாற்றுவதில் நிபுணி. சதிபதிகள் இருவரும், இந்த இலட் சியத்தை நோக்கி நடந்தால், வெள்ளைக்கோயில் பக்கம் குடியிருக்காமல் வேறு என்ன செய்ய முடியும்? மருதாயிக்குப் பிள்ளைகள் பிறந்தன. அவையெல்லாம் எப்பவோ ஒரு காலத்தில் நடந்த சமாசாரம்-- கனவுபோல. இப்பொழுது பேரன் மாடசாமியும், எருமைக்கிடாவுந்தான் அவளுடைய மங்கிய கண்கள் கண்ட உண்மைகள். கிடாவை வெளியில் மேயவிட்டுக்கொண்டு வருவான் பேரன். கிடாவும் நன்றாகக் கருகருவென்று ஊரார் வயலை மேய்ந்து கொழுத்து வளர்ந்திருந்தது. வாங்குவதற்கு ஆள் வருவதை மாடசாமி எதிர்பார்த்திருந்தான்.மாடசாமி கடைக்குட்டிப் பெண் அவளுடைய வழிப் பேரன். கொஞ்சம் துடியான பயல். பாட்டனின் ரத்தம் கொஞ்சம் ஜாஸ்தி. அதனால்தான் மாடு மேய்க்கிற 'சாக்கில், கிழவி யைக் குடிசையில் போட்டுவிட்டுப் போய் விடுவான். அவனுக்கு ஒரு பெண்ணைக் கட்டிவைத்து விட்டால், தனக்கு இந்தக் குடிசைக் காவல் ஓயும் என்று நிளைப்பாள் கிழவி. தன் கைக்கு ஒரு கோல் போல அவளுக்கும் ஒரு உதவிக் கட்டை தேவை என்று நினைத்தாள். காலத்தின் வாசனை படாத யமபுரியில் சிறிது பர பரப்பு. யமதர்ம ராஜா நேரிலேயே சென்று அழைத்து வர வேண்டிய ஒரு புள்ளியின் சீட்டுக் கிழிந்துவிட்டது என்ப தைச் சித்திரபுத்திரன் மகாராஜாவிடம் அறிவித்தான். சித்திரபுத்திரனுக்கு, ஓலைச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்தோ என்னவோ, சிறிது காலமாகப் பார்வை அவ்வளவு தெளிவில்லை. உண்மையை நேற்றும் இன்றும் அற்ற லோகத்தில் மாறுதல் ஏற் படுவது ஆச்சரியந்தான். இருந்தாலும் மறைக்க முடியவில்லையே! ་