பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

188 புதுமைப்பித்தன் கதைகள் தர்மராஜாவின் சிங்காதனத்தின் மேல், அந்தரத்தில் தொங்கும் ஒளி வாளின் மீது மாசு படர்ந்துவிட்டது- காரணம், மகாராஜாவின் தொழிலிலும் மனத்திலும் மாசு படர்ந்ததால் என்று கிங்கரர்களுக்குள் ஒரு வதந்தி. மகா ராஜாவும், தம் முன் வரும் உயிர்களுக்கு நியாயம் வழங் கும்போதெல்லாம், அடிக்கடி உயர அண்ணாந்து வாளைப் பார்த்துக் கொள்வாராம். போருக்கு முதல்வனையும், ஊருக்கு முதல்வரையும் மகாராஜாவே நேரில் சென்று அழைத்து வரவேண்டும் என்பது சம்பிரதாயம். காலத்திற்கு அதிபதியான மன்னன் அந்தக் கைங்கரியத்தைச் செய்வதில் மனக் குழப்பம் ஏற்பட்டது. பூலோகத்திலே. குறிப்பாக வெள்ளைக்கோயிலிலே அப்போது அஸ்தமன சமயம். பேய்க்காற்று யமதர்ம ராஜனின் வருகையை அலறி அறிவித்தது. பனைமரங்கள் தங்கள் ஓலைச் சிரங்களைச் சலசலத்துச் சிரக்கம்பம் செய் தன. சுடுகாட்டுச் சிதையில் வெந்து நீறாகும் வாத்தியார் உடல் ஒன்று, கிழவிக்குக் கிடைக்கப் போகும் பெருமை யைக் கண்டு, பொறாமைப் புகையைக் கக்கித் தன்னை யழித்துக் கொண்டது. எங்கிருந்தோ ஒரு கூகையின் அலறல். ஓடிப்போய்ப் பேயாக மாறியாவது தனக்குக் கிடைக்கப்போகும் சித்திர வதைகளிலிருந்து தப்ப முய லும் வாத்தியார் உயிரை மறித்து, தூண்டிலில் மாட்டி மேல் நோக்கிப் பறக்கும் கிங்கரர்கள், மகாராஜா தூரத் திலே வருவதைக் கண்டு, வேகமாக யமபுரியை நோக்கிச் செல்லலானார்கள். எங்கிருந்தோ ஒரு நாய் தர்மராஜனின் அறிந்துகொண்டு அழுது ஓலமிட்டது. வருகையை சாத்திவிட்டு கிழவி குடிசைக் கதவை இழுத்துச் இடுக்கான நடையில் வந்து உட்கார்ந்து, வெற்றிலைக் குழவியை எடுக்கத் தடவினாள். கை கொஞ்சம் நடுங் கியது. என்றுமில்லாமல் கொஞ்சம் நாவறட்சி ஏற்பட் டது. சவத்துப் பயலே அந்திலே சந்திலே தங்காதே,