பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

190 புதுமைப்பித்தன் கதைகள் உனக்கு அவளெப் புடிச்சுக் நல்லதுன்னான், என்ன சொல்றே?......' கட்டிப் போட்டுட்டா 1$ காலத்தின் அதிபனான, காலத்தின் எல்லைக்கு அப்பாற் பட்ட, யமதர்ம ராஜன் நடுநடுங்கினான். 'நான்தான் யமதர்ம ராஜன்!" என்று அவனது வாய் உளறியது. பயப்பிராந்தியில் வாய் உண்மையைக் கக்கி யது. ஆனால் அந்த உண்மை கிழவியின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்தவில்லை. டன் "குடிச்சுப்பிட்டுத்தான் வந்திருக்கே... ஓங்க பாட் குடிச்சுக் குடிச்சுத்தான் தொலைஞ்சான் ......அது தான் வெள்ளக்கோயில் குடிசை! நாசமாப் போரதுக்கு நாலு வளி வேணுமா? விதி யாரை விட்டுது. என்றாள். ... விதியைப்பற்றி நினைத்ததும் கிழவிக்கு என்று மில்லாத தளர்வு தட்டியது... மூச்சுத் திணறியது. யமனுக்குக் கால்களில் தெம்பு தட்டியது... விதிக்கோலைப் பற்றித் தன் ஆட்சியை நிலைநாட்ட நிமிர்ந்தான் 044 "ஏலே, ஒன் வக்கணை யெல்லாம் இருக்கட்டுமிலே, என்னா,எருமை அத்துக்கிட்டு ஓடுது? மறிச்சுப் பிடிச்சா?" என்றாள் கிழவி. "எதேச்சையாக அலைந்த வாகனத்தைக் கட்டிப் போட்டுப் பருத்தி விதை வைத்தால் நிற்குமா?" என்று நினைத்துக் கொண்டே, வெளியேறி வந்து சமிக்ஞை செய்தான் யமன். வாகனம் வந்து மறைவில் அவன் சொற்படி நின்றது. எருமையின் முதுகில் போட்டிருக்கிற பாசக் கயிற்றை எடுத்துக்கொண்டு மறுபடியும் உள்ளே நுழைந்தான் யமன். பாசத்தால் அவளைக் கட்டிவிடலாம் என்று நம்பி னான். பாவம்/ ஏலே, கயிறு நல்லா உறுதியா இருக்கே. எங்கலெ வாங்கினே? ஒங்க பாட்டனிருந்தாருல்ல. அவருக்கு அப்பங் காலத்துலேதான் இதுமாதிரி கெடைக்கும். அங்கென சுத்தி ஒரு கொடியாக் கட்டிப் போட்டு வய்யி.