பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

காலனும் கிழவியும் 191. ஒண்ணுக்கு மில்லாட்டா நாலு ஓலையையாவது சேத்துக் கட்டிக்கிட்டு வரலாம்/" என்றாள். பாசக் கயிற்றின் நுனியைக் கூரையைத் தாங்கும் விட்டத்தில் கட்டிக்கொண்டே, தான் அவள் பேரன் அல்லன் என்பதை இந்தக் கிழவிக்கு எப்படித் தெளிவு படுத்துவது என்று எண்ணி யெண்ணிப் பார்த்தான். தனது சுய உருவைக் காண்பித்தால் - பயந்து விட்டால் என்ன செய்வது என்ற நினைப்பு...... வேறு வழியில்லை... 'ஏ கிழவி, என்னை இப்படித் திரும்பிப் பார்!" என்று அதிகாரத் தொனியில் ஒரு குரல் எழுந்தது. கிழவி திரும்பிப் பார்த்தாள். கூரையின் முகட்டையும் தாண்டி ஸ்தூலத் தடையால் மறையாமல், யமன் தன் சுய உருவில் கம்பீரமாக நிற்பதைக் கண்டாள். "நீ யாரப்பா! இங்னே ஏம் பேரன் நிண்டுகிட்டிருந் தானே. அவனெங்கே?" என்றாள். "நான் தான் யமன்! நான் தான் அவன்; உன் பேர னில்லை !"" என்றான் யமன். "அப்படியா சேதி! வா,இப்படி இரி," என்று கொண்டே, வெற்றிலையைத் தட்டத் தொடங்கினாள் கிழவி. "இப்பம் எதுக்கு இங்கெ வந்தே ?' யமன் அவள் அருகில் வந்து உட்கார்ந்தான். அதனால். நின்ற தன் காம்பீரியம் மறைந்துவிட்டது. போருக்கு முதல்வனையும் ஊருக்கு மூத்தவரையும் அழைத்துக்கொண்டு போகவேண்டும்" நான்தான் என்றான். 66 "அப்பிடின்னா?" "நீ என்கூட வரவேண்டும். நீ அப்பொழுது கட்டிப் போடச் சொன்னாயே அது உன் எருமையல்ல, என் வாக GOT LO..." நான் ஒன்கூட வரணுமாக்கும்! என்னெ கூட்டிக் கிட்டுப் போவ ஒனக்குத் தெறமை யிருக்கா? ஒனக்குப்