பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193

காலனும் கிழவியும் 193: கண்டேயன் சமாசாரம்கூட அவனுக்கு அன்று வெற்றி மாதிரியே புலப்பட்டது. யமராஜனின் தோல்வியைக் கண்டு தன்னைக் காப்பாற்றிக்கொள்ளப் போய்ப் பதுங்கியதுபோலப் பேய்க் காற்றும் ஓய்ந்து நின்றது. மாடசாமி எருமையை ஓட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். கட்டுத்தறியில் தீனி போட்டுப் பருத்தி விதை வைத்துத் தயாராக இருந்ததைக் கண்டான். குருட்டுக் கிழவிக்கு வெறும் இடத்தில் எருமை யிருப்பதாகத் தோன்றியதால் எல்லாம் தானாகத் தடவித் தடவிச் செய்திருக்கிறாள் என்று அவனுக்குத் தோன்றியது. உள்ளே நுழைந்தான். வாயில் வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே கிழவி யமதேவனின் விஜயத்தையும். தோல்வியையும் பற்றிச் சொன்னாள். மாடசாமி பத்தின் அவநம்பிக்கையுடன் சிரித்தான். "குருட்டு மூதி என்னவோ ஒளருது?" என்று முணுமுணுத்தான். வாலி இருந்தாலும், "நல்ல கெட்டிக் கயிறு: காஞ்ச சருகாவது கட்டலாம், கைக்கு வந்தது தவறிவிட்டதே!" யென்று அவள் ஏங்கியது அவனுக்கும் கொஞ்சம் நம்பும். படிதான் இருந்தது.