பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

196 புதுமைப்பித்தன் கதைகள் கூடத் தலைகால் தெரியவில்லை. கோபாலபுரம் மோட்சமாக இருந்தது. எத்தனை கதைகள் எழுதினேன் எத்தனை கனவுகள் கண்டேன்! கோபாலபுரம்... அப்பப்பா. அதை நினைக்கும் பொழுதே.... சீச்சீ! என்ன முட்டாள் தனம் !...... பண்ணை ஐயரைப் போல சிநேகத்திற்கு நல்ல மனிதர் கிடையாது. அவருடன் பேசிக்கொண்டிருந்தால் என்ன சுவாரஸ்யம்! ஆனால், ஒவ்வொரு மனிதனிலும் ஒரு பேய் ஒளிந்துகொண்டிருக்கிறது என்பது சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது தெரியுமா? எவனொரு வனைக் கீறினாலும் இரத்தந்தான் வரும். உள்ளிருக்கும் தீமையைக் காண்பிக்கும் சிவப்பு வெளிச்சம் மாதிரி! மனி தன், அதற்கப்புறம் அவன் சுவாரஸ்யமாகப் புளுகும் விதி, அதைப்பற்றி அதிகமாகக் கூற வேண்டுமானால். பைத்தி யக்கார ஆஸ்பத்திரிக்குச் சரியான வேதாந்தம். அதி விருந்துதான் அம்மாதிரியான அசட்டுத்தனம் வரமுடியும். மனிதனுக்கும் தெய்வத்திற்கும் என்ன சம்பந்தம்? விதி யாம் விதி! நான் உட்கார்ந்து எழுதும் அறையிலிருந்து பார்த் தால், லக்ஷ்மி ஜலமெடுக்கப் போவது தெரியும். அவளது களங்கமற்ற சிரிப்பு உள்ளத்தை எவ்வாறு தீய்த்தது என்று யாருக்குத் தெரியும்? நான் மனிதன், கண்டவிடத் தில் எனது உள்ளத்தின் கொதிப்பைத் திறந்து காண் பிக்க முடியுமா ? அதிலும் வக்ஷ்மியிடம்? மனிதனும் குரங்குதான். எதை எடுத்தாலும் பிய்த்து முகரத்தான் தெரியும். அவள் எனது இலட்சியம். வேறு ஒருவனைக் கலியா ணம் செய்துகொண்டு அவனைக் காதலித்திருப்பவளைக் காதலிக்க எனக்கு உரிமையுண்டா? உணர்ச்சி, உரிமை யைத்தான் கவனிக்கிறதாக்கும் ! நட்சத்திரம் வேண்டு மென்று அழுகிற குழந்தைக்கு எதைக் கொடுத்து ஆற்ற முடியும்? எனது காதல் பாபம். எனக்கும் தெரியத்தான் செய் யும். ஆனால் இம்மாதிரியான பாபங்கள் எத்தனை வேண்டு மானாலும் செய்யலாம், செய்ய வேண்டும்! பாபந்தான் மனிதனது உடலைப் புனிதமாக்குகிறது.