பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

20 புதுமைப்பித்தன் கதைகள் "சாமி, வெள்ளையனில்லா?" "எப்பலே வந்தே? புத்தியா யிரு சவமே! கையிலே என்னலே?" "புள்ளை சாமி!" "அவ, மருதி எங்கலே!" "செத்துப்போனா.சாமி !... சாமீ!" "என்னவே!” "LIGOOT LO!" "போலே, முட்டா மூதி! நீயே வச்சுக்கோ! புத்தி யாப் பொளெ" "புத்தி!" r V வாட்டர் பாலத்தில் வெள்ளையன் வந்து போன பிறகு பல சம்பவங்கள் நடந்துவிட்டன. மருதிக்கு உலகத் தின்மீது இருந்த சிறு பசையும், இப்பொழுது அவளை விட்டு விலகி, நெடுந் தூரம் சென்றுவிட்டது. அடிக்கடி குழந்தையின் மீது நினைவு சென்று விழுந்துகொண்டே யிருந்தது. குழந்தைக்கு வெள்ளைச்சி என்ற பெயர் கொடுத்திருந்தாள். நியாயமாக, அந்த விஷயத்தில் விதி சரியாகத்தான் நடந்துகொண்டது. அதை வெள்ளைய னிடம் சேர்த்துவிட்டது. துரையவர்கள், சீமைக்குத் தனது புதிய ஆங்கிலக் காதலியுடன் செல்லுமுன், மருதிக்குக் கொடுத்த பரிசு பறங்கிப் புண். அதனுடைய ஆதிக்கம் அதிகமாக வளர ஆரம்பித்தது. - அடுத்த துரை வந்ததும் - அவருக்கு சுகாதாரம் ஒரு பெரிய பைத்தியம்.- மருதிக்குத் தோட்டக்காரி என்ற அந்தஸ்துப் போய், மறுபடியும் அவள் தேயிலைக் கூலி யாகிவிட்டாள். ஆனால் முன்போல் பெரிய தெய்வங்கள் இவளை ஏறெடுத்துப் பார்ப்பதும் கிடையாது: அதற்குப்