பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

200 புதுமைப்பித்தன் கதைகள் அந்த மோகனமான பொழுதிலே இயற்கைத் தாயின் காளியின் கோர ஸ்வரூபத்திலே. குதூகலித்துக் குரலெழுப் பும் பறவைகளிடத்திலே அவன் கல்வி கற்றான். அது கானமாகக் கவிதையாக எழுந்தது. எல்லோரும் கானப் பிரியன் என்றார்கள். அவனும் கானப்பிரியன் என்று தன்னை யழைத்துக்கொண்டான். எப்பொழுதும் அந்தத் தடாகத் துறையிலே என்ன அதிசயமோ! கானப்பிரியனை கானப்பிரியனை அங்கு காணாமல் இருக்க முடியாது. இல்லாவிட்டால் குரலெழுப்பும் குயில் கிளை களின் அடியில் அவன் நின்று கவனித்துக்கொண்டிருப் பதைக் காணலாம். அப்பொழுது அவன் கண்கள் - அவை என்ன தெய்வ தரிசனத்தைக் கண்டனவோ? அவற்றில் என்ன கனவு, எவ்வளவு உற்சாகம்! என்ன என்ன என்று என்னால் சொல்ல முடியுமா கவிஞனைக் கேட்டுப் பார்க்கவும். ? . கானப்பிரியன் சங்கோசப்பிராணி. மனிதர்கள்என்றால் அவன். உற்சாகம் எல்லாம் எங்கோ பதுங்கி ஒடுங்கிவிடும். அதிலும் பெண்கள்... கேட்கவே வேண்டாம். அவனிடம் பேசுவது என்றால் எல்லாருக்கும் ஆசை, அவனுக்கு மட்டும் கூச்சம். அவனைப் பார்ப்பதிலே ஒரு பெருமை. தனிப் ஊர் அம்பலகாரரின் மகள் பெண்களின் இலட்சிய மாயும் ஆண்களின் கனவாயும் இருந்தாள். அவள்தான் அவனை எப்படியோ பேச வைத்துவிட்டாள். அவன் உள் ளத்தை யறிந்தவள் அவள் ஒருத்திதான். அவன் கவிதை யின் கனிவைக் கண்டவள் அவளே. அவளைச் சாயங்காலம் சந்தித்தால் கானப்பிரியனுக் குப் புதிய பாட்டுக்கள் தேவி அருள் புரிவாள். நாவில் ஸரஸ்வதி நர்த்தனம் செய்வாள். இவர்கள் கூட்டுக்களி யிலே,தனிப்பட்ட கனவிலே, தேவியின் பாதுகாப்பிலே, உலகத்தின் இலட்சியம் மறைந்து வாழும். அவள் பெயர் காவேரி. அன்று காவேரியின் கன்னி. எழில் கம்பனை வளர்த்தது. வளர்த்தது. அது பழைய கதை. இப் பொழுது காவேரி, இந்தக் காவேரி.