பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202

202 புதுமைப்பித்தன் கதைகள் பக்கத்தில் அடைப்பைத் தொழில் புரியும் பணிப் பெண் கள். இடையில் மெல்லிய கலிங்கம், மேலே முத்து வடக்கச்சு. வரி 2 சற்றுக் கீழே இவனுக்கு ஏற்ற மந்திரி, பிரதானிகள். அவன் நாட்டிலே மாதம் மூன்று மழை பெய்து வருகிறதா திருடர் கொஞ்சமாகக் கொள்ளை யடிக்கிறார்களா, அந்நியர் இன்னும் எத்தனை பிரதேசங்கள் வசூலிக்க இருக்கின்றன என்பதைப் படாடோபத்துடனும் கூழைக்கும்பிடுடனும் சமூகத்தில் தெரிவித்துக்கொள்ளும் மந்திரிகள்! வசமாகாமல் ர் சேவகன் ஒருவன் ஓர் ஓலையைக் கொண்டு வந்து அடி பணிந்து நிற்கிறான். அரசன் அதைத் தொட்டுக்கொடுக்க, கற்றுச் சொல்லி பிரித்து, "ராஜாதி ராஜ ராஜ கெம்பீர அந்தகச் சோழ மண்டலாதிபதி சமஸ்தானத்திற்குக் கானப் பிரியன் எழுதிக் கொண்டது. எனது கவியைச் சமுகத்தில் அரங்கேற்ற ஆசை.-- கானப்பிரியன்." என்று படித்தான். "என்ன வாஸந்திகா?" 15 "வரட்டுமே! இந்த நடிகைகள் கொஞ்சம் நன்றாகப்பாடி ஆடுகிறார் களே!" "அவன்தான் வரட்டுமே!" "சரி. சேவகா, வரச்சொல்!” கானப்பிரியன் உள்ளே வருகிறான். இயற்கையின் நிமிர்ந்த நடை, நேர் நோக்கு - கண்களிலே ஏதோ தோன்றி மறைந்த ஒரு கனவு. சபையைப் பார்க்கிறான். செயற்கை யின் திறன், பெருமிதம், இறுமாப்பு,- எல்லாம் சற்று மலைப்பை உண்டுபண்ணுகின் றன். கவிஞன் அரசனைப் பார்க்கிறான். அந்தகன் கானப் பிரியனைப் பார்க்கிறான். வாஸந்திகை இருவரையும் நோக்கு கிறாள். இருவரையும் வெல்ல ஒரு வலை வீச்சு. உலகத்தின் சக்தி அவள் காலின் கீழ். ஏன் உலகத்தின் இலட்சியம் அத்துடன் இருக்கக் கூடாது?