பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

205

பொன்னகரம் பொன்னகரத்தைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்களா? நமது பௌராணிகர்களின் கனவைப் போல அங்கு ஒன்று மில்லை. பூர்வ புண்ணியம் என்று சொல்லுகிறார்களே. அந்தத் தத்துவத்தைக் கொண்டு. நியாயம் என்று சமாதா னப்படவேண்டிய விதிதான். ஒரு சில மகாராஜர்களுக் காக' இம்மையின் பயனைத் தேடிக் கொடுக்கக் கடமைப் பட்டு வசிக்கும் மனிதத் தேனீக்களுக்கு, உண்மையில் ஒரு பொன் நகரந்தான் அது. ரயில்வேத் தண்டவாளத்தின் பக்கமாக, சாராய டிப் போவுக்குப் போகிறதே ஒரு சந்து. அதுதான் அங்கு 'மெயின்' ரஸ்தா. கைகோத்த நான்கு பேர் வரிசை தாராள மாகப் போகலாம்,- எதிரே வண்டிகள் வராவிட்டால், இதற்குக் கிளையாக உள் வளைவுகள் உண்டு, முயல் வளைகள் போல். இந்தத் திவ்வியப் பிரதேசத்தைத் தரிசிக்க வேண்டு மானால், சிறு தூறலாக மழை சிணுசிணுத்துக் கொண் டிருக்கும் பொழுது சென்றால்தான் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். வழி நெடுகச் சேற்றுக் குழம்புகள். சாலையோரமாக 'முனிசிபல் கங்கை - அல்ல,யமுனை தானே கறுப்பாக இருக்கும்? - அதுதான். பிறகு ஓர் இரும்பு வேலி, அதற்குச் சற்று உயரத் தள்ளி அந்த ரயில்வேத் தண்டவாளம். வரிசையாக மனிதக்-கூடுகள் மனிதக்-கூடுகள் - ஆமாம், மறுபக்கம், வரிசையாக வசிப்பதற்குத்தான்! தண்ணீர்க் குழாய்கள்? இருக்கின்றன. மின்சார விளக்கு? ஞாபகமில்லை- சாதாரண எண்ணெய் விளக்கு,