பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

206 புதுமைப்பித்தன் கதைகள் அதாவது சந்திரன் இல்லாத காலங்களில் (கிருஷ்ண பட்சத்தில்) ஏற்றிவைத்தால் போதாதா? பொன்னகரத்துக் குழந்தைகளுக்கு மீன் பிடித்து விளையாடுவதில் வெகு பிரியம், அந்த முனிசிபல் தீர்த்தத் தில், மீன் ஏது? எங்கிருந்த பணக்கார வீடுகளிலிருந்தோ. சில சமயம், அழுகிய பழம், ஊசியவடை, இத்யாதி அது அந்த ஊர்க் குழந்தைகளின் உருண்டுவரும். ரகசியம். ய ரயில்வேத் தண்டவாளத்தின பக்கத்தில் விளையாடு வதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கி றது. போகக்கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத்தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள் தான் என்ன, 'கிளாக்ஸோ' மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க! புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத் திற்கு. வரிசையாக நின்று "குட்மார்னி ஸார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான், அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி. ஐந்து மணிக்கு அப்புறந்தான் ஊர் கலகல வென்று உயிர் பெற்று இருக்கும். அப்பொழுதிருந்துதான் அவ் வூர்ப் பெண்கள்' தங்கள் வேலையைச் செய்வார்கள். சாராய வண்டிகள், தண்ணீர் எடுக்க வரும் பெண்கள்! அங்கு தண்ணீர் எடுப்பது என்றால் ஒரு பாரதப் போர். B . இளவயதில் நரைத்தது போல் பஞ்சு படிந்த தலை. மாசடைந்த கண்கள், - விடிய விடிய மின்சார 'ஸ்பின்டிலை'ப் (கதிர்) பார்த்துக்கொண்டு இருந்தால், பிறகு கண் என்ன மாக இருக்கும்? கண்கள் தாம் என்ன இரும்பா? உழைப்பின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட கட்டமைந்த அழகு. ஆரோக் கியமா? அது எங்கிருந்து வந்தது? பாக்டீரியா, விஷக் கிருமி கள். காலரா இத்யாதி அங்கிருந்துதானே உற்பத்தி செய்யப்படுகின்றன! எப்படியாவது உயிர் வாழவேண்டும் என்று ஆசையிருந்தால் எல்லாம் நடக்கும். பழைய கற் காலத்து மனிதன், புலி சிங்கங்களுடன் குகையில் வாழ்ந்து வந்தான்; அவைகளும் அவனைக் கொன்றன; அவனும்