பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

பொன்னகரம் 207 அவைகளைக் கொன்றான். அதற்காக கொன்றான். அதற்காக வலிமை அற்று, வம்சத்தை விருத்தி செய்யாமல் செத்தொழிந்தா போனான்? வாழ்க்கையே ஒரு பெரிய வேட்டை, அதற் கென்ன? கழுத்தில் ஒரு கறுப்புக் கயிறு - வாழ்க்கைத் தொழு வின் அறிகுறி. அதைப்பற்றி அங்கு அதிகக் கவலை இல்லை. அது வேறு உலகம், ஐயா, அதன் தர்மங்களும் வேறு. அம்மாளு ஒரு மில் கூலி வயது இருபது அல்லது இருபத்திரண்டிற்கு மேல் போகாது. புருஷன் 'ஜட்கா' வைத்திருக்கிறான், சொந்த வண்டிதான். அம்மாளு, முரு கேசன் (அவள் புருஷன்), அவன் தாயார், தம்பி. முரு கேசன் குதிரை - ஆக நபர் ஐந்து சேர்ந்து அவர்கள் குடும்பம். இருவருடைய வரும்படியில்தான், இவர்கள் சாப்பாடு -(குதிரை உள்பட), வீட்டு வாடகை. போலீஸ் 'மாமூல்' முருகேசன் தம்பி திருட்டுத் தனமாகக் கஞ்சா அடிக்கக் காசு - எல்லாம் இதற்குள்தான். எல்லோரும் ஏகதேசக் குடியர்கள்தான். 'டல் ஸீசனில்' பசியை மறக்க வேறு வழி? பசி, ஏயா, பசி ! 'பத்தும் பசி வந்திடப் பறந்து போம்' என்று வெகு ஓய்யாரமாக. உடம்பில் பிடிக்காமல் பாடுகிறீரே; அங்கு நீர் ஒரு நாள் இருந்தால், உமக்கு அடி வயிற்றிலிருந்து வரும் அதன் அர்த்தம்! அன்றைக்கு முருகேசனுக்குக் குஷி. அவனும்,அவன் குதிரையும் 'தண்ணிபோட்டு விட்டு ரேஸ் விட்டார்கள். வண்டி 'டோக்கர்' அடித்தது. ஏர்க்கால் ஓடிந்தது. குதிரைக்குப் பலமான காயம். முருகேசனுக்கு ஊமையடி வீட்டில் கொண்டுவந்து போடும் பொழுது பேச்சு மூச்சில்லை. நல்ல காலம் குடித்திருந்தான், இந்த மாதிரி வலி தெரியாமலாவது கிடக்க. வீக்கத்திற்கு என்னத் தையோ அரைத்துப் பூசினாள் அம்மாளு. அப்பொழுது தான் சற்றுப் பேசினான். அவனுக்குப் பால் கஞ்சி வேண்டு மாம்! அம்மாளுக்குக் கூலிபோட இன்னும் இரண்டு நாள் இருக்கிறது. வீட்டில் காசேது அம்மாளு தண்ணீர் எடுக்க வருகிறாள்.