பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

210 புதுமைப்பித்தன் கதைகள் ரயில், கடகட குப்குப் என்று,எனது தியானத்தைக் கலைக்க முயன்றது. ரயில் செல்ல செல்லச், சென்னையின் இரைச்சல்.ஓம் என்ற ஹுங்காரம், நாகரிக யக்ஷனின் திருக்கண் நாட்டங் கள் - எல்லாம் மெதுவாக மறைந்தன. ஏன்? வேகமாகவே நான் ரயிலில் செல்லவில்லை. வெளியே நிலா. ஆனால். ஆற்றங்கரை மணல்... கரையில் பேராய்ச்சி கோயில் மயக்கத்தில் ...கண் பொட்டையாக்கும் மாலை இதன் கோபுரத்தளத்தில்,எத்தனை நாவல்கள் எனது மன உலகத் தில் ஒரு வாழ்க்கையைச் சிருஷ்டித்தன? அப்பொழுது, எங்கெங்கோ வாரி யிறைத்த பிரம்ம தேவனின் சிதறுண்ட நம்பிக்கைகள் போல ஏரியிட்ட கனல்கள் போன்ற நட்சத்திரங்கள்! வாழ்க்கை மேம் வானத்திலே அந்த மரமடர்ந்த இருட்டுத் திரைக்குமேல் செவ்விருள்! அந்தத் தேவனின் 3சாக நாடகம்! அந்தச் சாயங்காலம். சீதையின் சோகத்தையும், கதேயின் பாஸ்டையுமே எப்பொழுதும் என் நினைவிற்குக் கொண்டு வருகிறது. பேராய்ச்சி கோயில் உச்சித் தளத்தில் கையில் புஸ்த கத்துடன் நான்! ...... பேராய்ச்சி,காளியின் ஸ்வரூபம்.எங்கள் பெரி யண்ணத் தேவருக்குச் குடும்பத் தெய்வம்- தலைமுறை தலை முறையாகக் காத்துவந்த பேராய்ச்சி... பேராய்ச்சி! அதில் என்ன தொனி! எவ்வளவு அர்த்த புஷ்டி! இருண்ட வெளிச்சத்தில் இருண்ட கோரமான சிலை தாயின் கருணை. என்ன நம்பிக்கை? நாளைக்கு அம்மனுக்குக்கொடை.