பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

கும்! றன. சாயங்கால மயக்கம் 211 நாளைக்கு இவ்வளவு நேரத்தில் இங்கு எப்படி யிருக் இந்த மௌன சுகம் மருந்திற்காவது கிடைக்குமா? என் கண்கள் இருட்டில் அசட்டையாகத் துழாவுகின் கோயில் வாசலில் இரண்டு ஆட்டுக்கிடா. பெரியண்ணத் தேவருடையவைதான்...அம்மனுக்கு வளர்த்து விடப்பட்டவை. வாழ்வு நாளைவரைதான் என்று அவற்றிற்குத் தெரி யுமா? சித்திரபுத்திரன் மாதிரி, எனக்குத் தெரியும். எங்கெங்கோ புல்லையும் பூண்டையும் தின்ற கொழுப்பு- முட்டி விளையாடுகின்றன..."டபார்!" மண்டை வெடித்துவிடும் போலிருக்கிறது! பின்னுக்குச் சென்று மறுபடியும் ஓடிவந்து..... "டபார்!" ரத்தங் பிணக்கோ? கண்டாகிவிட்டது! என்ன கொள்கைப் நாளைக்கு இரண்டினுடைய இரத்தமும் அந்தப் பலி பீடத்தில் கலக்குமுன், அதற்குள் என்ன அவசரம்? அதுதான் சுவாரஸ்யம்! அந்தச் சண்டைதான் வாழ்க்கையின் ரகசியம், தத்து வம். அதிலேதான் நம்பிக்கை வைத்து மனித நாகரிகம் இதுவரை வளர்ந்து வந்திருக்கிறது. gal !....... அதைப்பற்றி எனக்குத் தெரியாது. 'நாளைக்குப் பலியாகப் போகிறோம்!' என்று தெரிந்தால், இந்த மாதிரி முட்டிக் கொள்ள மனம் வருமா? வந்தால், முட்டிக்கொள்வதில், வாழ்க்கைப் போட்டியில், சுவாரஸ்யம் ஏற்படுமா? ......... "ஸார்! கொஞ்சம் நகர்ந்து உட்காருங்கள்!" நான் ரயிலில்தான் உட்கார்ந்திருந்தேன். அந்த மாலை மயக்கந்தான்... அந்த ஊர்ப் பைத்தியந்தான்!