பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

நினைவுப் பாதை 213 உருவம் உட்கார்ந்திருக்கிறது. வேறு யாருமில்லை. அவர் தான். அன்று அவ்வீட்டில் தூங்காதவர் அவர் ஒருவர் தான். முழங்காலைக் கட்டியபடி, மேலே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.குறிப்பாக எதன்மீதும் பார்வையை உபயோகிக்கவில்லை. வெளியே, வாசலில், விசிப் பலகை யின்மேல் முழுதும் போர்த்த உடலங்கள். சமயா சமயங் களில் குறட்டை விட்டு, உயிர் இருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன. வைரவன் பிள்ளை மனது, அண்டசராசரங்கள் எல்லா வற்றையும் பார்வையிட்டுவிட்டு, மறுபடியும் மறுபடியும் வள்ளியம்மை யாச்சியின் கிடத்தப்பட்ட கற்பனைப் பிரே தத்தின் மீது வந்து கவிகிறது.. -- ஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்தில் அவர் வள்ளியம்மை யாச்சியைப்பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது. மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி,உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது, ஒவ் வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக்கொண்டா இருக்கிறார்கள் ?...... விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்புப் பிறக்கும். அப்பொழுது அவர் மனக்கண் முன் வள்ளியம்மை யாச்சி புதுப் பெண் கோலத்தில் தம் கைபிடித்து வந்த காட்சி நின்று தோன்றியது. வைரவன் பிள்ளை தூங்குவதற்காக உட்கார்ந்த இடத் தருகில் ஒரு சிறு ஜன்னல்- பனங் கம்பு 'அழி' வைத்தது. உள்ளிருந்து குசுகுசு என்ற சப்தம்..... "ஏட்டி. அஞ்சு கொத்துச் சவடி (சங்கிலி) உனக் குன்னு தானேட்டி சொன்னா, பேச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாக்கிட்டே கேட்டு வாங்கிக்க!"..... சர் ஆமாம்...... எனக்குத் தூக்கம் வருதுங்கே,- என் னைப் போட்டுப் படுத்தாதே!"......என்று வெடுக்கென்னும் ஓர் இளம் பெண் குரல் 14