பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214

214 புதுமைப்பித்தன் கதைகள் உடனே 'வீல்' என்று தொட்டிலில் அழும் குழந்தைக் Gra...... "சவமெ நீயும் ஆரம்பிச்சிட்டியா?...... ஒன் வாய் ஓயாதா? ...... செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா? எனக் குன்னுதான் வந்திட்டுதம்மா......!" என்ற அங்கலாய்ப்பு 66 'அதாரது பாப்பாத்தியா......" என்று நினைத்தார் வைரவன் பிள்ளை. அவள் தான் பிள்ளையின் நாற்பது வயதான மூதல் புத்திரி பாப்பாத்தியம்மாள். அவளுக்கு, வயது வந்த ஒரு பெண்ணும், நான்கு வயதுச் சிறுவனும். பத்து மாதக் கைக்குழந்தையும் உண்டு....... இதைக் கேட்ட வைரவன் பிள்ளைக்குக் கைக்குழந்தை பாப்பாத்தி. சமைந்து (பருவமெய்தி) சடங்கு நடக்கும் போது அவள் நின்ற கோலம். அப்புறம் மணப் பந்த லில் அவள் நின்ற காட்சி எல்லாம் அவர் மனக்கண் முன் சலனப் படமாக விரிந்தது. பாப்பாத்தி எப்பொழு தும் அப்படித்தான்...... ஆமாம், அவள் பிறக்கும்போது தானே கடை முறிந்து நாலு பக்கமும் பணமுடை..... கஷ்டத்தில் வளர்ந்த பெண் - காசில் இருந்த கருத்து அள வுக்கு மீறி வளர்ந்து விட்டது......அவள் மகளுக்கென்று சொல்வியிருந்தால், அவள் மகளுக்குத்தானே... அதற்குள் எதற்கு இந்தச் சின்னப் புத்தி....."ஏட்டி. இந்தவெத்திலை யைத் தட்டு" என்று எடுத்த வாய்,- அதிகாலையில் எழுந் திருந்ததும் அவர் போட்டுக்கொள்வதற்காகத் தயாராக வெற்றிலையை இடித்து வைத்தல் அவரது பல் போனதி லிருந்து தட்டாது நடந்துவரும் பழக்கம் - சடக்கென்று நின்றது....... உள்ளத்தின் குழப்பம் புதிய மாறுபாட்டில் மேலும் குழம்பியது. . வீட்டின் பக்கத்தில் நின்று குடிமகன் சுடலை ஊதிய இரட்டைச் சங்கின் அலறல் மறுநாள் வந்ததைப் பிள்ளை யவர்கள் பிரக்ஞைக்குக் கொணர்ந்தது......அதே சமயத் தில் உள்ளிருந்து பெண்களின் அழுகைக் குரல், சங்கத் தின் ஏக்க அலைகளுடன் தொடர்ந்து மனப் பாரத்தை அதிகப்படுத்தியது.......வைரவன் பிள்ளையின் பார்வை விடிவெள்ளியை நாடியது... அது அவர் கண்ணில் தென் .