பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217

நினைவுப் பாதை 217 "செத்துப் போயிட்டா!" என்று அர்த்த மில்லாமல் சொன்னான் சிறுவன். அது பசலெ, அதுக்கென்ன தெரியும்?" என்றார் வைரவன் பிள்ளை. "அவனா?வலுப் பயல்லெ, அவனுக்கா தெரியாது? ஏலே, ஓங்க ஆச்சியை-" என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர் பால் முதலிய கிரியைக்கு வேண் டியவற்றையும், குடம் சொம்பு முதலியவற்றையும் எடுத்து எல்லாம் காலா வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே! நீங்க மேலவீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க!... என்றார். ' +2 சுடலை மறுபடியும் மெழுகு வைத்த இரட்டைச் சங்கை முழக்கினான். எல்லோரும் துண்டை உதறித் தோள் மேல் போட்டுக்கொண்டு எழுந்தனர். சுடலை முன்னால் முழக்கிக்கொண்டே நடந்தான். வைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக்கொண்டு தள்ளாடி நடந்தார். அவருக்கு முன்னால், தலை முண்டித மான அவருடைய ஒரே மகன் செல்லுகிறான்...மனசிலோ, நடையிலோ கவலை தள்ளாடவில்லை. வைரவன் பிள்ளை மனக் கண்முன், மணக்கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை யாச்சியின் உருவம் நின்றது. சுடலை சங்கை முழக்கினான்.. இனிப் பார்க்கப் போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது... "ஏலே நீயுமா? திரும்பலியா!" என்ற சுந்தரம் பிள்ளை யின் குரல்... பேரன் தொடர்வதைத் திரும்பிப் பார்த்தார். மறுபடியும் சுடலை சங்கை முழக்கிக்கொண்டே சந்து திரும்பினான்...