பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

220 புதுமைப்பித்தன் கதைகள் என்பதில் ஒரு பூரிப்பு! கணவரைப் பார்த்துக் கொண் டாள். ஸ்ரீதேவியின் கடைக்கண் வீச்சுக் கிணங்கி,வரங்களை வாரிச் சொரியக் குழந்தையை அணுகினார் மகாவிஷ்ணு. குழந்தை ஓடிக்கொண்டிருந்தது. பகற்கனவை ரஸித்துப் பல முறை ஏமாந்த குழந்தை அது. அதற்கு அதற்கு எதிலும் சர்வ சந்தேகம். மனத்தின் பேரில் அதற்கு அசைக்க முடியாத, நிரந்தரமான சந்தேகம். உத்தானபாதனது மடியில் உட்கார்ந்து விளையாடுவ தாக. கொஞ்சுவதாக, நம்பி எத்தனையோ முறை முன் ஏமாந்திருக்கிறதல்லவா? மகாவிஷ்ணு சங்கு சக்ராயுதராக, அதனை வழிமறித்து நின்று, "குழந்தாய்!" என்று அழைத்தார். நீயார்? என்று கேட்டது குழந்தை. "குழந்தாய், என்னைத் தெரியாதா? நான்தான் மகா விஷ்ணு! என்று புன் சிரிப்புடன் தம்மை அறிவித்துக் கொண்டார். பொய்! நான் என்ன கனவு காண்கிறேனா?" என்று தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டது குழந்தை. "நிஜந்தான். இந்தா, இந்த வரத்தைக் கிறேன்! இதிலிருந்து தெரிந்துகொள் !" 'ஓஹோ, செப்பிடு வித்தைக்காரனா?' கொடுக் நான்தான் மகாவிஷ்ணு; என் பக்கத்திலிருக்கும் ஸ்ரீதேவியைப் பார்!" "பகல்வேஷக்காரனுங்கூடவா! எங்கப்பாகிட்டப்போ! சம்மானம் குடுப்பார் -- என்னை ஏமாத்த முடியாது!" என்று சிரித்துக்கொண்டே, "நேரமாகிறது; தபஸ் பண்ணப் போறேன்!" என்று காட்டிற்குள் ஓடிவிட்டது அக்குழந்தை. கொடுக்க விரும்பிய வரத்தை ஒரு நட்சத்திரத்தின் மீது வீசி எறிந்துவிட்டு, ஆகாச கங்கையில் ஒரு முழுக்குப் போட்டார் பகவான்.