பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

322 புதுமைப்பித்தன் கதைகள் 'அதோ கிடக்கிறது பார், நான் போட்டுவிட்டு வந்த உடல்; அதில் போய் உட்கார்ந்துகொள். அப்புறம் உன் கிங்கரர்களை ஏவி, உன்னை அழைத்து வரும்படி உத்தரவு செய். அப்பொழுது தெரியும் உனக்கு!" என்று சொல்லிச் சிரித்தது அந்த மனித உயிர். IV பர வெளியிலே, பேரம்பலத்திலே நின்று, தன்னையே மறந்த லயத்தில், ஆனந்தக் கூத்திட்டுப் பிரபஞ்சத்தை நடத்துகிறான் சிவபிரான். ஒரு கால் தூக்கி உலகுய்ய நின்றாடுகிறான். பக்கத்தில் வந்து நின்றார் நாரதர். 44 அம்மையப்பா! எட்ட உருளும் மண்ணுலகத்தைப் பார்த்தருள்க!... அதோ கூனிக் குறுகி மண்ணில் உட்கார்ந்து, ரசவாதம் செய்கிறானே! சிற்றம்பலமான உள்ளத்திலே, தேவரீர் கழலொலி என்ன நாதத்தை எழுப்புகிறது. தெரியுமா......? துன்பம், நம்பிக்கை - வறட்சி, முடிவற்ற சோகம்..." அவனது தன்னை மறந்த வெறியில் கூத்தாடும் பித்தனுக்கா இவ்வார்த்தைகள் செவியில் விழப்போகின்றன! வீணையை மீட்டிக்கொண்டு வேறு திசையைப் பார்த்து நடந்தார் நாரதர். V கைலயங்கிரியிலே. கண்ணைப் பறிக்கும் தூய வெண் பனிமலை யடுக்குகள் சிவந்த தீ நாக்குகளைக் கக்குகின்றன. திசையும் திசைத் தேவர்களும், யாவரும் யாவையும் எரிந்து மடிந்து ஒன்று மற்ற பாழாக. சூன்யமாகப் போகும் படி, பிரான், கோரச் சுடரான நெற்றிக்கண்ணைத் திறந்து, தன் தொழில் திறமையில் பெருமிதம் கொண்டு புன்னகை செய்கிறான்! கண்ணில் வெறியின் பார்வை!