பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

துன்பக் கேணி 29 என்பதல்ல. சுப்பனின் மனைவி என்றே அழைக்கப் பட்டாள். பதிநான்கு வருஷங்கள் ஒருவனுடன் தன் வாழ்க்கையைப் பிணித்துக்கொண்ட பிறகாவது, மனைவி என்ற அந்தஸ்து வரக்கூடாதா? மருதி அவள் இப்பொழுது கொஞ்சம் பருத்து சற்று விகாரமாக இருந்தாள். முன் பல் இரண்டு விழுந்து விட்டது. தலையும் கத்தை கத்தையாக ஒவ்வொரு பக்கத்தில் நரைத்துவிட்டது. மருதி சுப்பனுக்கு என்ன மருந்து வைத்துவிட்டாளோ கொள்வதுண்டு. காரணம் என்று கூலிகள் பேசிக் சுப்பனின் திருவிளையாடல் கள் எப்படி யிருந்தாலும், மருதியின் பேச்சை யாராவது எடுத்தால், அவர்கள் கதி அதோகதிதான். →> வெள்ளச்சி - அவள்தான் மருதியின் வாழ்க்கைப் பற்றுதலுக்கு ஒரு சிறு தீபம்! வாட்டர் பாலத்திலேயே பதிநான்கு வருஷங்களைக் கழித்தால் ஒருவரும் களங்க மற்றவராக இருக்க முடியாது. அவளுக்குச் சகல விஷயங் களையும் அடித்துப் பேசத்தெரியும். ஆனால் அவ்வளவும் வெறும் விளையாட்டுத்தனம். அவள் நின்ற விடத்தில் மெளனத்தைக் காண முடியாது. சிரிப்பும் சத்தமும் எங்காவது கேட்டால் வெள்ளச்சி அங்கு இருக்கிறாள் என்று திட்டமாகச் சொல்லிவிடலாம். வெள்ளச்சி இப்பொழுது பிராயமடைந்துவிட்டாள். மருதி கலியாண மாகி வாசவன்பட்டிக்கு முதல் முதலாக வந்த சமயத்தில் இருந்த மாதிரி, அதே அச்சாக மூக்கும் முழியுமாக இருந் தாள். மருதிக்கு அவளை ஒரு நல்ல இடத்தில் கலியாணம் பண்ணி வைத்துவிட வேண்டுமென்று ஆசை. அந்த 'வாட்டர் பால'க் கும்பலில், 'கருவாட்டைக் காக்கிற மாதிரி (மருதியே இப்படிச் சொல்லிக்கொள்வாள்)- காத்து வந்தாள். வெள்ளச்சி வேலை யில்லாமல் சுத்திக் கொண்டு வரவில்லை. அவளும் தேயிலைக் கூலியாகச் சிறிது காசு சம்பாதிக்கிறாள். வெள்ளைச்சியின் சம்பளம் வந்து வீடு நிறையப் போவதில்லை. ஆனாலும் அவள் கூலியைச் செலவு செய்யாமல் சேர்த்து வைத்தால்.... சுப்பன் இப்பொழுது தலைமைக் கங்காணி வேலை பார்த்து வருகிறான். அதனால் கொஞ்சம் சம்பள உயர்வு.