பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

பதிப்புரை நமது நாட்டின் நமது தாய் மொழியின்- நமது தலை முறையின் தலை சிறந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன். கம்பனுக்குப்பின் பாரதி. பாரதிக்குப்பின்....? என்ற கேள்விக்கு விடையாக நம்முன் காட்சி தரு கிறவர் புதுமைப்பித்தன். வசன நடையிலே உயிர்ப்பைப் பெய்து தந்த வர்; சிறு கதைகள் மூலம் தமிழ் நாட்டின் வாழ்க் கையை, தத்துவத்தை, பண்பாட்டை நமக்கும் ஏனையோருக்கும் படம் படமாகத் தீட்டிக் காட்டி யவர் புதுமைப்பித்தன். அவரது கதைகளின் முதல் தொகுதி இது. இத் தொகுதியின் முந்திய பதிப்புக்களில் சேர்ந் திருந்த ஆண்சிங்கம், பறிமுதல், கடிதம் முதலிய கதைகள் 'ஆண்மை' என்ற மற்றொரு நூலில் இடம் பெற்றிருக்கிற படியால் அவை தவிர ஏனைய கதைகள் இதில் உள்ளன. ஸ்டார் பிரசுரம்