பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 புதுமைப்பித்தன் கதைகள் XII ராமச்சந்திரன் பள்ளிக்கூடத்தின் முன்பு இருக்கும் பாத்திகளுக்குத் தண்ணீர் தெளித்துக்கொண்டிருக்கிறான். பள்ளிக்கூடம் விட்டுச் சிறுவர்களெல்லாம் சென்றுவிட் டார்கள். எங்கு பார்த்தாலும் நிசப்தம். அவன் மனம் அடிக்கடி ஒரு சிந்தனையில் சென்று விழுந்துகொண்டிருந்தது. மரகதம்! - அவளுடன் தான் ' அதிகமாக நெருங்கிப் பழகுவது தவறு என்று அடிக்கடி பட்டுக்கொண்டிருந்தது. இந்தக் குழந்தைகளின் கலகலப் பான பேச்சுக்கப்புறம், மரகதத்திடந்தான் அவனுக்குப் பேச மனமிருந்தது. அப்பொழுது வெள்ளைச்சி அங்கு வந்தாள். "என்ன விசேஷம்?" என்றான். வெள்ளைச்சியை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் பேசியதில்லை. "எளுத்துப் படிக்கணும்! அதுக்காக வந்தேன்!" என்றாள் வெள்ளைச்சி. "படிக்க வேண்டுமா? காளையிலிருந்து வா?" பள்ளிக்கூட சமயத்தில் "தடிச்சி மாதிரி, அப்ப வரமாட்டேன். வெக்கமாக இருக்கு. இந்த நேரத்துக்கு வந்தா என்ன?" "யாரும் ஏதாவது நினைக்க மாட்டார்களா- நீ என் னுடன் தனியாக இருந்தால்? "யாருக்கு அவ்வளவு தைரியம்? பல்லை உதுத்துப் யுட மாட்டேனா?" என்றாள் வெள்ளைச்சி. தின் துடிதுடிப்பைக் கண்டதும் வந்துவிட்டது. அவள் முகத் அவனுக்கே சிரிப்பு அவ்வளவு தைரியம், களங்கமற்ற தன்மை/ அவளுக்குப் படித்துக் கொடுக்கவேண்டும் என்று அவன் தீர்மானித்தான். "இப்போதே ஆரம்பிப்போமா? என்றான் ராமச் சந்திரன். உடனே அவள் உட்கார்ந்துவிடுவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.