பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

துன்பக் கேணி முதிர்ந்த விபசாரியின் பேச்சுக்களுடன் அவள் உள்ளமும் வெளிப்பட்டது. 35 களங்கமற்ற படிப்பு முடிந்தால், கூலிக்காரர்களுடைய சமாசாரங் அபிப்பிராயங்களுடன் களையெல்லாம் தன் அவனிடம் சொல்லுவாள். கலந்து. யாருக்கும் தெரியாமல் ஒன்றைச் செய்தால் பாவ மில்லை. இது வெள்ளைச்சியின் அபிப்பிராயம். இதை எவ்வளவோ மாற்ற முயன்றும் ராமச்சந்திர னால் முடியவில்லை. ஆனால் அவனுடன் பழகியதில் சுத்த பாக இருக்கப் பழக்கப்படுத்திக் கொண்டாள் வெள்ளைச்சி. மருதிக்கு மகள் வாத்தியாரிடம் சென்று வருவது பிடிக்கவில்லை. ஆனால் வெள்ளைச்சியிடம் எவ்வளவு சொல்லியும் பயன் இல்லை. வாத்தியாரைப்பற்றி ஏதாவது பேச்செடுத்தால் மல்லு மல்லென்று சண்டைக்கு வந்து விடுவாள். துரை பங்களாவில் வேலை செய்யும் குதிரைக்காரச் சின்னானுக்கு அவளைக் கட்டிக் கொடுத்துவிட வேண்டும் என்பது மருதியின் ஆசை. கங்காணிச் சுப்பனும் சம்மதித்தான். விஷயம் பேச்சு மட்டில் இருக்கிறது. குதிரைக்காரச் சின்னானுக்கும் அவளைக் கல்யாணம் செய்துகொள்வதில் இஷ்டமாம். அன்று சாயங்காலம் வெள்ளைச்சி சிறிது நேரம் கழித்துப் பாடம் படிக்க வந்தாள். . பாலர் பாடப் புத்தகத்தை எடுத்துக் கையில் வைத் துக்கொண்டு. வா, வெள்ளச்சி, இந்த நாற்காலியில் உட்காரு! எது இவ்வளவு நேரம்?" என்றான் ராமச் சந்திரன். வெள்ளைச்சி பதில் சொல்லவில்லை. ராமச்சந்திரன் சொல்லுவது அவள் காதில் ஏறவே யில்லை. பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.