பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

36 44 புதுமைப்பித்தன் கதைகள் என்ன வெள்ளைச்சி இன்றைக்குப் படிப்பு சுகமில்லை போலிருக்கிறது! நாளைக்கு வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய்? வீட்டில் ஏதாவது சண்டையா?" என்றான். குதிரைக்காரச் 56 நான் இங்கே வரப்படாதாம். சின்னானை எனக்குக் கலியாணம் செய்யணுமாம்!" அது நல்லதுதானே! முந்தியே சொன்னேனே. யாராவது சொல்லுவார்கள் என்று. மருதி சொல்லுகிறபடி கேள்!" நான் வரப்புடாதா ? எனக்குச் சின்னான் பயலைப் புடிக்கலை, அப்போ-'"' அது எப்படி இருந்தால் என்ன? மருதி சொல்வதைக் கேள்!" "நான் அப்படித்தான் வருவேன். மானேஜர் அய்யா கிட்டச் சொல்லி என்னெ வரவுடாமே ஆக்குவாங்களாம். நான் படிச்சா இந்த மூதிகளுக்கு என்ன?" ராமச்சந்திரனுக்கு எப்படி விளக்குவதென்று தெரிய வில்லை. அவள் பிடிவாதம் குழந்தையின் பிடிவாதத்தைப் போல் இருந்தது. அவளைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிடுவது மேல் என்று பட்டது. ஆனால் அவளை விரட்டுவதற்கு அவனுக் குப் பிடிக்கவில்லை. ஒரு யோசனை பட்டது. ஒரு பைத்தியக்காரத்தன மான யோசனை. அவளைத் தானே கலியாணம் செய்து கொண்டால் - அவளுடைய குழந்தைத்தனம், அவளுடைய பிடிவாதம்,ஆனால் உள்ளுக்குள் இருக்கும் விளைந்த அன்பு, எல்லாம் வசீகரித்தன. ஆனால் பறைச்சி! ஒத்து வருமா? "வெள்ளைச்சி ! நீ என்னைக் கலியாணம் செய்து கொள்ளுகிறாயா?' வெள்ளைச்சியின் முகத்தில் ஆச்சரியம். குதூகலம் - எல்லாம் அலைமேல் அலையாக எழுந்தன. அன்பு,