பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37

துன்பக் கேணி 37 'கலியாணம் எதுக்கு?..." என்று அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அப்பார்வையில், அவளது அன்பு, அதற்கு மேல். அவர்கள் இருவருக்குமிடையில் இருந்த தடையின் பயம் - எல்லாம் கலந்திருந்தன. அவள் உள்ளத்தின் போக்கு ராமச்சந்திரனுக்குத் தெளிவாகத் தெரிந்தது. அவனுக்காக அவள் எதை வேண்டு மானாலும் பணையம் வைக்கக் கூடியவள். வெள்ளைச்சி! விளையாட்டிற்கல்ல - நிஜமாகக் கேட் கிறேன்.என்னைக் கலியாணம் செய்துகொள்!" என்றான். அவள், "ஆகட்டும்!" என்று அவனை நெருங்கினாள். XIV ஸ்டோர் மானேஜருக்கு ஐம்பது வயதிற்கு மேலானா லும் மனமும் ஆசையும் குறைந்தபாடில்லை. இப்பொழுது அவருடைய திருவிளையாடல்கள் எல்லாம் மிகவும் மறை முகமாக நடக்கும். ஆனால், அவற்றிற்குக் கையாள் குதிரைக்காரச் சின்னான். நெடுநாளாக ஸ்டோர் மானே ஜருக்கு வெள்ளைச்சியின் மீது கண் உண்டு. இப்பொழுது இருந்த வளமையில், மருதி யும், கங்காணிச் சுப்பனும் முரடர்கள். மேலும் வெள்ளைச் சியின் குணம் 'வாட்டர் பாலத்திற்கு நன்றாகத் தெரியும். ஆனால், ஆசை யாரை விட்டது? குதிரைக்காரச் சின்னான் இந்த விஷயத்தைத் தெரிந்துகொண்டான். நெடுநாளாகக் கங்காணி வேலையில் அவனுக்குக் கண் உண்டு. நீர்வீழ்ச்சியின் கீழ் 21 மைல் வரை தேயிலைத் தோட் டம் படர்ந்திருந்தது. அப்பக்கத்தில் ஆட்கள் நடமாட்டம் அவ்வளவு கிடையாது. தோட்டத்தின் எல்லையைத் தாண்டி னால் அழிக்கப்படாத 'ரிஸர்வ்' காடுகள். அவற்றின் இடையே நீர்வீழ்ச்சியிலிருந்து ஓடும் ஆறு, பாறைகளின் மீது சலசலத்துப் பாய்கிறது. 3