பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

சிற்பியின் நரகம் 47 குள் சென்றான் சாத்தன். அவன் வயதிற்கு அவ்வளவு. துடிதுடிப்பு ஆச்சரியமானதுதான்! 'மூபாங்கோ, தீபம்!" என்று கத்தினான். அந்தக் காப்பிரி ஒரு கைவிளக்கை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தான். ஜன்னல் இல்லாத அந்த அறையிலும் காற்று நூலிழைபோல் வந்து உள்ளத்தையும் உடலையும் மயக்கியது. "இங்கு கூடவா விளக்கு இல்லை! திரையை ஒதுக்கு! ஸ்வாமி. பைலார்க்கஸ், இதுதான் என் வாழ்க்கை!" என்று திரையை ஒதுக்கினான். இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். அந்த மங்கிய தீப வொளியில், ஒற்றைக் காலைத் தூக்கி நடிக்கும் பாவனை யில்,ஆள் உயரத்தில் மனித விக்ரகம்! விரிந்த சடையும் அதன்மீது விளங்கும் பிறையும், விரிந்து சின்முத்திரை களைக் காண்பிக்கும் கைகளும், அந்த அதரத்தில் தோன் றிய அபூர்வப் புன்னகையும், மனத்தில் அலைமேல் அலை யாகச் சிந்தனைக் கற்பனைகளைக் கிளப்பின. மூவரும் அந்தச் சிலையே யாயினர். சிலையின் ஒவ்வொரு வளை விலும். ஒவ்வொரு அங்கத்திலும் என்ன ஜீவத் துடி துடிப்பு? சந்நியாசி,தம்மை யறியாமல், பாட ஆரம்பித்தார்... பனித்தச் சடையும், பவளம்போல் மேனியீற் பால் வெண்ணீறும், குனித்தப் புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும், இனித்தங்கசிய எடுத்த பொற் பரதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே ! "சுவாமி, அப்படிச் சொல்லக் கூடாது?" . சாத்தா! அவர் சொல்லுவதுதான் சரி! இது கலையா? இது சிருஷ்டி! இதை என்ன செய்யப் போகிறாய்?"