பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

46. புதுமைப்பித்தன் கதைகள் "அரசன் கோவிலுக்கு... இதென்ன கேள்வி?" .8 என்ன? இந்த அசட்டுத்தனத்தை விட்டுத்தள்ளு. அரசனுடைய அந்தப்புர நிர்வாண உருவங்களின் பக்க லில் இதை வைத்தாலும் அர்த்தம் உண்டு... இதை உடைத்துக் குன்றின்மேல் எறிந்தாலும் அந்தத் துண்டு களுக்கு அர்த்தம் உண்டு; ஜீவன் உண்டு..." என்று வெறி பிடித்தவன்போல் பேசினான் பைலார்க்கஸ். சீ, பைலார்க்கஸ்! உனது வெறி பிடித்த கொள்கை களுக்கு யவனந்தான் சரி! அகஸ்தூஸ - அந்த உங்கள் சாம்ராட் - அவனுக்குத்தான் சரி உன் பேத்தல்!' 'சாத்தனாரே! உமது இலட்சியத்திற்கு அரசன் கோரிக்கைதான் சரியான முடிவு. இனி ஏன் இந்த ஜைனர்கள் தலை தூக்கப் போகிறார்கள்..." என்றார் சாமியார். இந்த வெறி பிடித்த மனிதர்களைவிட, அந்தக் கட லுக்கு எவ்வளவோ புத்தியிருக்கிறது..." என்று கோபித் துக்கொண்டு, பைலார்க்கஸ் வெளியேறிவிட்டான். மு II அன்றுதான் கும்பாபிஷேகம். சிலையைப் பிரதிஷ்டை செய்த தினம், சோழ தேசத்திலேயே அது ஒரு பெரும் களியாட்டம் என்று கூறவேண்டும். சாத்தனுக்கு இலட் சியம் நிறைவேறிற்று. அன்று பைலார்க்கஸ் தனது குதூகலத்தில் பங்கெடுத்துக்கொள்ள உயிருடன் இல்லையே என்ற வருத்தம் சாத்தனுக்கு அதிகம். புதிய கோவிலிலிருந்து வீடு சேரும்பொழுது அர்த்த ஜாமமாகி விட்டது. வயதின் முதிர்ச்சி அன்றுதான் அவனைச் சிறிது தளர்த்தியது. சோர்ந்து படுத்தான். அயர்ந்துவிட்டான். அப்பா! என்ன ஜோதி! அகண்டமான எல்லையற்ற வெளி! அதிலே சாத்தனின் இலட்சியம், அந்த அர்த்த மற்ற, ஆனால் அர்த்தபுஷ்டி மிகுந்த ஒரு புன்சிரிப்பு!