பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

54 புதுமைப்பித்தன் கதைகள் மகள். அவ்வூரிலேயே பிறந்து, வெகு காலமாக மாமாவென் றும், சித்தப்பாவென்றும் அழைத்து வந்த ஒருவரைக் கணவராகப் பெற்றவள். ஏழையாகப் பிறந்தால் அழகா கப் பிறக்கக்கூடாது என்ற விதியிருக்கிறதா? கலியாணி யின் அழகு, ஆளை மயக்கியடிக்கும் மோக லாகிரியில் பிறந்த காம சொரூபம் அன்று. நினைவுகள் ஓடி மறையும் கண்கள் சோகம் கலந்த பார்வை! அவளது புன்னகை ஆளை மயக்கா விட்டாலும் ஆளை வசீகரிக்கும். அப்படி வசீகரிக்கப் படாதவன் மண் சிலை தான். சுப்புவையரும். அவர் வழி படும் லிங்க வடிவத்திலிருக்கும் 'விரிசடைக் கடவுளின் உருவச் சிலையின் ஹிருதயத் துடிதுடிப்பை ஏறக்குறையப் பெற்றிருந்தார். கலியாணி வாலைப் பருவத்தினள். அதிலும் இயற்கையின் பரிபூரண சக்தியும் சோபையும் கொந்தளிக் கும் நிலையிலுள்ளவள். எதற்கெடுத்தாலும் தன்னை மரக் கட்டையாகக் கருதி, இறந்த மூத்தாளின் பெருமையை நினைத்து உருகும் சுப்புவையரின் எண்ணங்களைத் தன் வசம் திருப்புவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவள். அதாவது, உள்ளுற அவளறியாமலே இயற்கை அந்த வேலையில் அவளைத் தூண்டியது. அவர் வார்த்தைகள் அவளது வாலிப அழகின் முகத்திலடித்தன. அவரைக் கவர்ச்சிக்கக்கூடியபடியெல்லாம் தனது பெண்மைக் குணங் களைப் பயன்படுத்தினாள். சுப்புவையர் மசிகிற பேர்வழி யாகத் தெரியவில்லை. கல்யாணியும் ஒரு பெண்ணாயிற்றே, அவளுக்கும் இயற்கையின் தேவையும் தூண்டுதலும் இருக் குமே என்ற ஞானம் சிறிதும் கிடையாது போயிற்று சுப்புவையருக்கு. . அப்பொழுதுதான் சைத்ரிகரான சுந்தர சர்மா அங்கு வந்தார். III அப்பொழுது முன் வேனிற்காலம். பனி நீங்கிவிட்டது. வாய்க்காலில் ஜலமும் வற்றிவிட்டது. பயிர்கள் அறு வடையை எதிர்பார்த்துத் தலை சாய்ந்து நின்றன. குளத்தில் நீர் வற்ற இன்னும் இரண்டு மூன்று மாதமாகும். ஊருக் குக் குடி தண்ணீர் குளத்திலிருந்துதான். ஆற்றிற்கு நடக்க