பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

கலியாணி 55. முடியாதவர்களும், நடக்கப் பிரியமில்லாதவர்களும், குளத் திலேயே ஜலம் எடுத்துக் கொள்ளுவார்கள். சுந்தர சர்மா அக்ரகாரத்தில் ஒரு காலிக் குச்சு வீட் டில் வாடகைக்கு இருந்துகொண்டு, சாப்பாட்டிற்குச் சுப்பு வையர் வீட்டில் வாடிக்கை வைத்துக் கொண்டார். வரும் பொழுது அவர் மனம் களங்கமற்ற மத்தியான்ன வானம் போல் இருந்தது. எப்பொழுதும் குளக்கரையிலோ அல் லது வாய்க்கால் கரையிலோ இருந்துகொண்டு இரண்டு மூன்று மாட்டுக்காரப் பையன்கள் வேடிக்கை பார்க்கச் சித்திரம் தீட்டிக் கொண்டிருப்பது அவரது பொழுது போக்கு. சில சமயங்களில் மத்தியானச் சாப்பாட்டிற்கு வர இரண்டு அல்லது மூன்று மணியாகிவிடும். சில சமயம் காலைச் சாப்பாடு இல்லாமலே சென்றுவிடுவார். வருவது எந்த நேரமென்பதில்லை. கலியாணி அவரைத் தனது சகோதரன்போல் பாவித்து வந்தாள். ஆனால், உள்ளம் அவரைக் கண்டவுடன் பயத் தினால் சலிக்கும். அவர் வந்து இரண்டு மூன்று நாட் களுக்கு அவருக்குச் சாப்பாடு போடுவது என்றால் வியர்த்து விருவிருத்து முகஞ் சிவந்து விடுவாள். காரணம் சர்மா வாணிதாஸபுரத்தினரைப்போல் அல்லாது. சற்று நாகரிக் மாகவும் சுத்தமாகவும் உடையணிந்து கொள்வதுதான். ஆனால், அவரது கிராப்புத் தலை கழுத்து வரை வளர்ந்து மறைத்திருந்தாலும், எப்பொழுதும் சீர்குலைந்தே முகத் திலும் காதிலும் கிடக்கும். கறுத்த கண்கள் பொழுதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது நோக்கற்றுப் பார்த்துக்கொண் போல எதையாவது டிருக்கும். எப் சர்மா சைத்திரிகராக இருந்தும் கலியாணியைப் பார்க் காதது ஆச்சரியம் என்று நினைக்கலாம். கனவுகள் அழுத் தும் உள்ளத்தைக் கொண்ட அவர், சுப்புவையரின் இல் லத்தை மறைமுகமான ஹோட்டலாகக் கருதியதனால், சாப்பாடு முடிவது அவர் அறியாமலே நடந்து வந்தது. மேலும் சுப்புவையரின் வீடு, ஜன்னல்களுக்குப் பெயர்