பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

. கலியாணி 57 சமையல் உள்ளிலிருந்த கலியாணியும் கையில் அகல் விளக்குடன் வந்து குத்து விளக்கை ஏற்றினாள். . "என்னடி, விளக்கை ஏன் ஏற்றக்கூடாது? இவ்வளவு நேரமும் என்ன பண்ணினே?" "ஏற்றினேனே! மங்கியிருக்கும் திரியைத் தூண்டா திருந்துவிட்டதினால் அணைந்துவிட்டது. சாத்தை வடிச் சுட்டுருந்தேன்! என்றாள் கலியாணி. சரி சரி! எனக்குத் தெரியுமே! வீடும் வாசலும் கெடக் கிற கெடையைப் பார்த்தால் நன்னாயிருக்கு, பெருக்கி விட்டுச் சீக்கிரம் இலையைப்போடு!" என்றார். கலியாணியின் முகம் சிவந்தது. அந்நியர்கள் முன்பாக வும் இம்மாதிரிப் பேசுகிறாரே என்று அவள் உள்ளங் கலங் கியது. 'அவர் என்ன நினைப்பார்!' என்ற நாணம், எல்லாம் சுறுக்குச் சுறுக்கென்று தைக்கும் வார்த்தைகள், இவை அவள் உள்ளத்தைக் குழப்பிவிட்டன. சரேலென்று உள்ளே சென்றுவிட்டாள். அவளுக்கு அழுகை அழுகை யாக வந்தது. "இன்று எங்கே போயிருந்தேள்?" என்றார் சுப்பு வையர். அணைக்கட்டுப் பக்கம் போயிருந்தேன். வேலை முடிவ தற்கு நேரமாகிவிட்டது. மத்தியானம் வெய்யிலில் வரு வானேன் என்று நினைத்தேன். நாளைக்கு அல்லது மறு நாளைக்குக் கொழுந்து மாமலைப் பக்கம் போகலாம் என்று நினைக்கிறேன்.போவதை இப்பொழுதே சொல்லிவிட்டால் நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லையல்லவா?" என்று சிரித்தார் சர்மா. இதற்குள் கலியாணி கதவோரத்தில் நின்றுகொண்டு, என்ன செய்றேள்? சொம்பில் ஜலம் வைத்திருக்கிறேன்!' என்றாள். இந்தாருங்கள்,கால் கைகளைக் கழுவிக் கொள்ளுங் கள்!' என்று சர்மாவிடம் ஒரு செம்பு ஜலத்தைக்கொடுத்து விட்டுத் தானும் கால் முகம் கழுவினார். ऐ