பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

58 புதுமைப்பித்தன் கதைகள் இருவரும் உள்ளே சென்று குத்து விளக்கின் முன்பு போடப்பட்டிருந்த இலைகளின் எதிரே உட்கார்ந்து கொண்டனர். அன்று இருவருக்கும் பரிமாறுவதென்றால் பிராணன் போவது போலிருந்தது. முதலில் சுப்புவையருக்குச் சாதத்தைப் படைத்தாள் கை நடுங்கியதினால் சிறிது சிதறிவிட்டது. 4.0 "எனக்குத் தெரியுமே! இப்படிச் சிந்திச் சிதறினால் வாழ்ந்தாற் போல்தான்! பார்த்துப் போடக்கூடாதா? போதும், போதும்!" என்றார். ளாகவே. 'அவள் இருந்தால்... கர்ம பலன்!" முனகிக்கொண்டார். பிறகு மனத்திற்குள் என்று . இவ்வார்த்தைகள் கலியாணிக்குக் கேட்டன. ஏற்கெனவே, குழம்பிய மனம் மேலும் கலங்கி விட்டது. கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. சர்மாவுக்குப் படைப்பதற்காகக் குனிந்தாள். பதற் றத்தில் தட்டிலிருந்த சாதம் முழுவதும் இலையில் கவி ழ்ந்து விட்டது. சர்மா, 'போதும்' என்று இடைமறித்தார். அவரது புறங்கைமீது ஒரு குவியல் மட்டும் தடைப்பட்டு நின்றது. 'போதும்' என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே தட்டிக்கொண்டிருக்கும் பிரகிருதி அசடா. அல் லது அதற்குக் குறும்பா என்று நோக்கினார். அவர் சற்று அண்ணாந்து பார்த்ததும் அவர் எதிர்பார்த்ததற்கு விபரீத மான காட்சி!- பயம், கூச்சத்திலும், குத்து வார்த்தை களிலும் ஏற்பட்ட பயம்.- என்பது முகத்தில் எழுதி ஒட்டியதுபோல் மிரண்ட பார்வை! 1 அவர் பார்த்ததும் அவளுக்கு இன்னும் மிரட்சி அதிகமாயிற்று. அந்தக் குழப்பத்தில் அவர்கள் கைகள் சந்தித்தன. அவள் கண்களில் ஆறுதலை எதிர்நோக்கும் குழந்தையின் வருத்தம்; அழுகை துடிதுடிக்கும் உதடுகள். ஒரு கணம் இருவரும் ஒரே ம் பார்வையில் அசைவற் றிருந்தனர். மறு கணம் அவள் நிமிர்ந்து திரும்பிப் பாராது வேகமாக உள்ளே சென்று விட்டாள். சர்மாவின் உள் ளத்தில் அது ஒரு விலக்க முடியாத சித்திரமாகப் பதிந்தது.