பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

6 புதுமைப்பித்தன் கதைகள் . மு. லின் அர்ச்சகர் வீடு ஒன்றையும், இரண்டு மூன்று இடிந்து கூரை விழுந்த வீடுகளையுமுடைய தெருத்தான் அக்ரகாரம். அது இருபது அடிக்கப்புறம் மறுபடியும் திரும்பி, கத்தா ழைச்செடி பூவரச மரங்களுக்கிடையில் சென்று, பிள்ளை மார் வீதியாக மாறுகிறது. தட்டோடு போட்டு, நாழி ஓடுகளால் சாய்ப்பு இறக்கிய பெரிய வீடுதான் பண்ணையார் நல்லகுற்றாலம் பிள்ளையின் வீடு. அதைத் தொடர்ந்த இரண்டு மூன்று வளைவுகளில், கணக்கு முதலியார், கி.மு சங்கரலிங்கம் பிள்ளை, பலசரக்குக் கடை ஓட்டப்பிடாரம் பிள்ளை - ஓட்டப்பிடாரம் என்ற ஊர் அவரது பூர்வீகம்- வாத்தியார் சுப்புப் பிள்ளை, பிள்ளையார் கோயில் பூசாரி வேணவலிங்கப் பண்டாரம் - இவர்கள் எல்லாரும் வசிக்கும் குடிசைகள். குடிசைகளைப் பார்த்தாலே, அவர்கள் பண்ணைப் பிள்ளையைப்போல் வாழ்க்கையின் சௌகரியங் களைப் பெற்றவர்கள் அல்லர் என்று தெரிந்துவிடும். எல் லாரும், பண்ணைப் பிள்ளையவர்களின் வயல்களை, வார மாகவோ குத்தகையாகவோ எடுத்துப் பயிர் செய்து ஜீவிப் பவர்கள். வேளாளர் எல்லோரும் ஒன்றுக்குள் ஒன்று தான். கமறும் தேங்காயெண்ணெய் வாசனை பரிமளிக்கும் இந்தத் தெருவைத் தாண்டினால் ஊர்ப் பொட்டல். அதில் தனிக் காட்டு ராஜாவாக, தேஜோமயானந்தமாக, ஊர்க் காவல் தெய்வமாகிய சுடலைமாடப் பெருமானின் பீடம், நெடுமரம்போல், காரைக்கட்டியினால், உறுதியாகக் கட்டப் பட்டு நிற்கும். இடிந்து விழுந்த கோவிலில் மூர்த்திகர மாக எழுந்தருளியிருக்கும் மகாவிஷ்ணுவைவிட இவருக்கு ஊர் மக்களிடையில் அதிக மதிப்பு உண்டு. அது அந்தச் சுடலை மாடனுக்குத் தெரியுமோ என்னவோ! அதைச் சுற்றி ஐந்தாறு மறவர் குடிசைகள். இவற்றில் ஊர்த் தலையாரி முதலியோர் வசிப்பார்கள். குடிசைகளைத் தாண்டிச் சென்றால். மானாமாரிக் குளம் - அதாவது, தண்ணீருக்கு வானம் பார்க்கும் ஏரி. அதன் இக்கரை யின் வலப்புறத்தில் பறைச்சேரி : அங்கு ஒரு முப்பது குடிசைகள். வேளாளர் தெருவில், ஊர்ப் பொட்டலை அணுகினாற் போல், பண்ணைப் பிள்ளையவர்கள் கட்டிய சவுக்கை. ஒலைக்கூரை வேய்ந்த திண்ணை, ஓட்டப்பிடாரம் பிள்ளையின் '