பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

60 புதுமைப்பித்தன் கதைகள் கலியாணி உள்ளே சென்று, ஒரு டம்ளரில் ஜலம் கொண்டு வந்து வைத்து விட்டு, அவர் பாயையும் தலையணை யையும் எடுத்து உதறிக் கூடத்தில் விரித்துவிட்டு மறுபடி யும் உள்ளே சென்றுவிட்டாள். அன்று பசி வேறா வரப் போகிறது! அவள் மனம் எங் கெல்லாமோ சுற்றியது. சர்மாவைப்பற்றி அடிக்கடி அவளை யறியாமல் அவள் உள்ளம் நாடியது. ஆனால், தனது கணவர் அந்நியர் முன்பும் இப்படிப் பேசுகிறாரே என்ற வருத்தம், ஏங்கி ஏங்கி யழுதாள். அழுகையில் ஓர் ஆறுதல் இருந் ததுபோல் தெரிந்தது. மறுபடியும் 'அடியே!' என்ற சப்தம். "என்ன?" என்று கேட்டுக் கொண்டே எழுந்து சென்றாள். "இன்னும் சாப்பிட்டு முடியவில்லையா? இந்தக் காலைப் பிடி! அப்பா! முருகா! சம்போ, சங்கரா!" என்று கொட்டாவி விட்டுக் கொண்டே பாயில் படுத்துக் கொண் டார் சுப்புவையர். உட்கார்ந்து மெதுவாகக் காலைப் பிடித்துக்கொண்டே யிருந்தாள் கலியாணி. அவளுடைய கலங்கிய கண்களி லிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் அவர் முழங்காலில் விழுந்தது. "என்னடி, மேலெல்லாம் எச்சல் பண்ராய்? ஓரெழவும் தெரியல்லெ, என்ன ஜன்மமடா?" என்றார். கலியாணி சற்று நேரம் மெளனமாக இருந்தாள். அவரிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று துணிச்சல் பிறந்தது. மீது 65 பாருங்கோ!" என்றாள். "உம். போதும் பிடித்தது!" என்றார் ஐயர். அவர் கையை மெதுவாக எடுத்துத் தன் மார்பின் வைத்துக்கொண்டு, அவாள் முன்னெல்லாம் என்னைப் பேசுகிறீர்களே! நான் என்ன செய்துவிட் டேன்?" என்று சிரிக்க முயன்றாள். கண்களிலிருந்து கண்ணீர் வந்தது. அவள் புன்னகை பரிதாபகரமாக இருந்தது.