பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

64 புதுமைப்பித்தன் கதைகள் குளக்கரை வந்துவிட்டது. குனிந்துகொண்டு மேட் டில் ஏறி, கரையின்மீது வளர்ந்திருந்த மரத்தடியில் நின்று, முகத்தைத் துடைத்துக்கொண்டார். இரண்டு மூன்று வினாடிகளில் கண் கூச்சம் விலகியது. குளத்தில் யாருமில்லை. யாருமில்லையா! மரத்தின் மறைவில் மறைவில் ஜலத்தில் நின்றுகொண்டு கலியாணி தனது ஈரப் புடவையைப் பிழிந்து உடுத்திக் கொண்டிருந்தாள். ஈரம் சொட்டும் கூந்தல் முதுகை மறைத்தது. கன்னத்திலும், தோளிலும், குளக்கரையில் நன்றாக விளக்கி வைத்திருந்த குடத்திலும், கிளைகளின் ஊடே பாய்ந்த சூரியவொளி பிரதிபலித்து மின்னியது. "அப்பா! வர்ணப் பெட்டியும் படம் எழுதும் திரைச் சீலையும் எடுத்து வரவில்லையே !" என்று நினைத்தார் சர்மா. கலியாணிக்கு அவர் இருப்பது தெரியாது. தனிமை என்ற மன மறைவில் தனது ஈரப் புடவைகளை எடுத்து உதறிக் கொசுவி உடுத்திக்கொண்டாள். புடவையில் நின்ற அந்த அழகு அவருக்கு மஜும்தாரின் சித்திரத்தை நினைவூட்டியது. த குனிந்து குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு. கலியாணி கரையேறு வதற்குத் திரும்பினாள். அவள் முன்பு சர்மா வைத்த கண் மாறாமல் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டதும் திகைத்துவிட்டாள். முகம் முழுவதும் சிவந்துவிட்டது. கண்கள் மிரண்டு அவரையே வெறித்து நோக்கின. ஈரப் போவது என்றால், அவரைக்கடந்து போகவேண்டும். மனம் குழம்பியது. என்ன செய்வது? என்ன செய்வது? வெட்கம் தலை குனியச் செய்துவிட்டது. சர்மாவுக்கு அவளிடம் பேசவேண்டுமென்ற ஆசை, எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? நான் இன்று கொழுந்து மாமலைப் பக்கம் போகி றேன். நேற்றுப் போல் இன்றைக்கும் பட்டினியாக இருந்துவிடாதீர்கள்? நான் வராவிட்டால் பட்டினி இருப்பதாவது? அதென்ன பைத்தியக்காரத்தனம் ?' என்று சிரித்தார். அவர்கள் உள்ளம் இருந்த நிலையில்,