பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

கலியாணி 66 இம்மாதிரியான பேச்சு, அபாயகரமான துறைகளிலிருந்து விலகி, நிம்மதி அளிப்பதுபோல ஒரு பிரமையை உண்டு பண்ணியது. கலியாணிக்கு இவ்வார்த்தைகள் கொஞ்சம் தைரி யத்தை யளித்தன. அவரிடம் பேசுவதற்கு மனம் ஆவல் கொண்டது. உள்ளத்தின் நிம்மதி கன்னத்தின் சிவப்பைச் சிறிது குறைத்தது. ஆண் பிள்ளைகள் சாப்பிடுமுன் கொட்டிக்கொண்டு, அவாளுக்குக் கல்லையும் மண்ணையுமா போடுவது?இப்பவே போரேளா? காலையிலே ஏதாவது சாப்பிட வேண்டாமா? அங்கு சாப்பாட்டிற்கு.." என்றாள். "இப்பொழுது சாப்பிட வருகிறேன். மத்தியானத் திற்கு என்ன? அதை நான் பார்த்துக்கொள்ளுவேன். ஏது இவ்வளவு நேரம்? எப்பொழுதும் அருணோதயத்தில் ஸ்நானம் ஆய்விடுமே?" என்றார். அதற்கு அவள் ஒன்றும் பதில் சொல்லவில்லை. அவள் முகம் மறுபடியும் சிவந்தது. இரவு பட்ட வேதனை யும்,ஓடிய எண்ணங்களும், மறுபடியும் அவள் மனத்தில் தோன்ற ஆரம்பித்தன. அவரைப் பரிதாபகரமாகப் பார்த்துவிட்டுக் கரை யேறி, வீட்டை நோக்கி நடந்தாள். அவரைத் தாண்டிச் செல்லும்பொழுது அவள் ஈரப்புடவை அலர்மீதுபட்டது. சர்மாவுக்கு அவளை அப்படியே பிடித்து ஆலிங்கனம் செய் யக் கரங்கள் துடித்தன. ஆனால், தமது கனவுக் கோட்டை இடிந்து பாழாகிவிட்டால் என்ன செய்வது என்ற பயந் தான் அவரைத் தடுத்தது. சர்மா குளித்துவிட்டு நேராகக் கலியாணியின் வீட்டை யடைந்தார். அப்பொழுது சுப்புவையர் கோவிலுக்குச் சென்றுவிட்டார்.வீட்டில் கலியாணியைத் தவிர வேறு ஒருவருமில்லை. இவ்வரவை எதிர்பார்த்திருந்த கலியாணி, இலையைப் போட்டுச் சுடுசாதம் எடுத்து வைத்தாள்.