பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

.66 புதுமைப்பித்தன் கதைகள் "என்ன? ஏது, இதற்குள் சமையலாகிவிட்டது? ஏன் இவ்வளவு அவசரம்!" என்றார் சர்மா. அவருக்குச் சாப்பாடு செல்லாததற்குக் காரணம் பசியின்மையன்று. 29 இன்னும் கொஞ்சம் குழம்பு போட்டுச் சாப்பிடுங் கள், என்றாள் கலியாணி. அன்று அவளுக்கு வாய்ப் பூட்டுத் திறக்கப்பட்ட மாதிரி இருந்தது. அவரிடம் பேசு வதில் ஓர் ஆறுதல். "காலையில் சுடு சாதம் சாப்பிட முடியுமா?...அவர் எங்கே? கோவிலுக்குப் போயிருக்கிறாரா? எப்பொழுது வருவார்?... கொஞ்சமாகப் போடுங்கள். போதும்!" என்றார். சாப்பாடு முடிந்தது. கை கழுவ ஜலம் வெளியில் வைக்கப்படவில்லை. பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்ற கலியாணி வரச் சிறிது தாமதமாயிற்று.சர்மா பின்புறம் சென்று கைகழுவிக் கொண்டு, சமையலறைப் பக்கமிருந்த தாழ்வாரத்தின் பக்கம் வந்தார். ஐயோ! ஜலம்வைக்க மறந்துவிட்டேனா? இந்தாருங் கள். இதை மத்தியானத்திற்கு வைத்துக்கொள்ளுங்கள்!" என்று ஒரு சிறு பொட்டலத்தைக் கையில் கொடுத்தாள். "இதென்ன? எனக்கு ஒன்றும் வேண்டாம் என் றேனே!" என்றார். "தோசை! கொஞ்சந்தான் வைத்திருக்கிறேன். மத்தி யானம் பூராவும் பட்டினியிருக்கவாவது?" என்றாள் கலி யாணி. அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கெஞ்சு வது போல அவளுடைய கண்கள் அவரை நோக்கின. சர்மா, 'கலியாணி!' என்று கம்மிய குரலில் அவளை யழைத்துவிட்டு, அப்படியே இழுத்து ஆலிங்கனம் செய்து, அதரத்தில் முத்தமிட்டார். கலியாணியும், கட்டுண்ட சர்ப்பம்போல், தன்னையறியாது கொந்தளித்த உள்ளத்தின் எதிரொலிக்குச் சிறிது செவி சாய்த்துவிட்டாள். பிரக்ஞை வந்ததுபோல் நடைமுறைச் சம்பிரதாயங்கள் அவளைத் தாக்கின.