பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

துன்பக் கேணி 7 பலசரக்குக் கடைக்கு எதிர்த்தாற்போல் இருக்கும். ஊர்ப் பேச்சு, ஊர்வம்பு. கி.மு.வின் அரசாங்க நிர்வாகம். சீட்டாட்டம் எல்லாம் அங்குதான். சவுக்கையில், வேனிற் காலங்களில் இரவில் ஆட்கள் படுப்பதற்கும், பகலில் பெரிய மனிதர்' சாய்ந்திருந்து போவதற்கும், கோரைப் பாய். அழுக்குத் தலையணை, திண்டு முதலியவை மூலைக்கு ஒன்றாகக் கிடக்கும். ஓட்டப்பிடாரம் பிள்ளையின் கடை யில், ரூலர் சிகரெட் முதல் பின்னை எண்ணெய் வரை வாங்கிக் கொள்ளலாம். மகா சிவராத்திரி, சுடலைமாட னுக்குக் கொடை முதலிய காலங்களில் அவர் சீட்டுக் கட்டுக்களும் விற்பார். ஓட்டப்பிடாரம் பிள்ளை பலசரக்கு களில் மட்டும் வியாபாரம் செய்பவர் அல்லர். குழிப் பெருக்கம், அரிவரி முதலிய ஆரம்பக்கல்வி விஷயங்களிலும் பண்டமாற்று வியாபாரம் நடத்துபவர். உற்சாகம் வந்து விட்டால் கடை முன்பு கூடியிருக்கும் தேவமார்களுக்கு 'மருதை வீரன் கதை, அல்லியரசாணி மாலை முதலிய வற்றை வாசித்துக் காலட்சேபம் செய்வார். சவுக்கையில் சுவாரஸ்யமான பேச்சுக்கள் அடிபட்டால், அவர் கடையி லிருந்துகொண்டே கூட்டத்தில் தம்முடைய பங்கையும் சேர்த்து விடுவார். கோடை காலம் ஆரம்பமாகி அறுப்பும் தொடங்கிவிட் டது. அறுப்புத் தொடங்கிவிட்டது என்றால் இட்ட பிடாரம் பிள்ளைக்கும், அதைவிட, சேரியின் பக்கத்தில் கள்ளுக்கடை வைத்திருக்கும் இசக்கி நாடாருக்கும் கொள்ளை. சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து இரவு பத்துப் பதினொரு மணிவரை, பிள்ளையவர்களின் கடை முன்பு சந்தை இரைச்சலாக இருக்கும். வாசவன்பட்டியில் அறுப்பு ஆரம்பித்து விட்டது. சாயங்காலம் பொழுது சாய்கிற சமயம். கணக்குப் பிள்ளை யும்,கி.மு.வும் சவுக்கையில் உட்கார்ந்து கொண்டிருக் கிறார்கள். கி.மு. வரி வசூலிப்பதில் மும்முரம். அவர் முன்பு அரசாங்கப் பழுப்புக்காகித நோட்டுப் புத்தகங்கள். நீளமான பை - இத்யாதி கிடக்கின்றன. பக்கத்தில் சவுக் கையின் ஓரத்தில் தலையாரி கட்டையத் தேவன் நின்று கொண்டிருக்கிறான்.