பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

70 புதுமைப்பித்தன் கதைகள் "ஐயோடி! அது முடியாது!" அந்த மங்கிய வெளிச்சத்திலும் அவளது மிரண்ட பார்வை மின்னியது. "பிறகு......?" எனக்கு ஒன்றும் தெரியவில்லை. நீங்கள் சொல்லு கிறமாதிரி .........அதற்குப் பயமாக இருக்கிறது! சர்மாவுக்கு உலகம் அர்த்தமற்ற கேலிக் கூத்துப் போலும், அசட்டுத்தனம் போலும் பட்டது. "கலியாணி, நான் போகிறேன்! என்றார். "எங்கே? விடுங்கள்!" .. போகவேண்டாம்! இங்கேயே இருந்து சீ! அது முடியாத காரியம். என்னுடன் வா" என்று கையைப் பிடித்தார். "முடியாது!" மறுபடியும் அக்கரைப் பக்கம் ஒரு மனித உருவம் சென்று இருளில் மறைந்தது. . கலியாணியின் வாழ்க்கை - அலையில் ஒரு குமிழி உடைந்து போயிற்று.