பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

74 புதுமைப்பித்தன் கதைகள் வாங்றது? எண்ணெ புண்ணாக்கு - பகலெல்லாம் என்ன செய்துகிட்டு இருந்தே? இருடனம் பொறவா எண்ணை எல்லாம் நாளைக்குப் பார்த்துக்கலாம்!" "சோம்பல் வந்தா சாத்திரமும் வரும். எல்லாம் வரும். ஏன் அண்ணைக்குப் போய் வாங்கிட்டு வரலியா எல்லாம் ஒங்களுக்குத்தான். இப்பத்தான் அப்பளக் காரன் வந்து கொடுத்துட்டுப் போனான்; பிரியமா சாப்பிடுவே ளென்று சொன்னேன். பின்னெ அந்தச் சின்னக் கொரங்கே என்ன இன்னும் காணலே! போனாப் போனதுதான்; நீங்கதான் சித்த பாருங்களேன்" இவ்வளவிற்கும் அவர் இருந்தால் தானே! விறகுப் பிரதேசத்தைத் தாண்டி வழுக்குப் பிரதேசத்தை எட்டி விட்டார். புகையையும் பேச்சையும் தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது. முருகதாசரின் ஆஸ்தான அறையின் ஒரு விசித்திரம் என்னவென்றால், சென்னையில் 'லைட்டிங் டைம் அட்டவணையைக்கூட மதிக்காமல், அது இருண்டு விடும். இம்மாதிரி மண்ணெண்ணெய் நெருக்கடி ஏற்படாத காலங்களில், அந்த அறைக்குத்தான் முதலில் இராத்திரி. ஆனால், எண்ணெய் நெருக்கடிக் காலங்களில் சிவபிரானின் ஒற்றைக் கண் போன்ற அந்த அறையின் சன்னல் எதிர்ப் பக்கம் நிற்கும் மின்சார விளக்குக் கம்பத்திலிருந்து கொஞ்சம் வெளிச்சத்தைப் பிச்சை வாங்கும். கார்ப்பொ ரேஷன் தயவு வரும்வரை, ஸ்ரீ முருகதாசர். வேறு வழி யில்லாமல், தெருநடையில் நின்று அலமுவின் வருகையை எதிர்நோக்கியிருக்க வேண்டியதாயிற்று. . + முருகதாசர் வானத்தை அளக்கும் கதைகளைக் கட்டு வதில் மிகவும் சமர்த்தர்; 'சாகா வரம் பெற்ற' கதை களும் எழுதுவார். அந்தத் திறமையை உத்தேசித்து, ஒரு விளம்பரக் கம்பெனி மாதம் முப்பது ரூபாய்க்கு வானத்தை யளக்கும் அவரது கற்பனைத் திறமையைக் குத்தகை எடுத்துக்கொண்டது. அதனால் அவர், வீர புருஷர்களையும், அழியாத சித்திரங்களையும் எழுத்தோ வியமாகத் தீட்டுவதை விட்டு விட்டு, சோயாபீன்ஸ் முதல்,