பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

ஒரு நாள் கழிந்தது "தீப்பெட்டி எங்கடீ?" என்றார் முருகதாசர். 77 "கடைக்காரன் குடுக்கமாட்டேங்கறான், அப்பா! குடுக்காதெ போன நேரே வீட்டுக்கு வாரது! இங்கே என்ன இருப்பு?" அப்படிக் கேளுங்க சாமி! நம்ம கொளந்தென்னு மொட்டாமே சொல்லிப் பாத்தேனுங்க. வீட்டுக்கு வண்டி யிலே கொண்டாந்துவுடணுமுண்ணு மொண்டி பண்ணு துங்க. எனக்குக் காலுவே சுளுக்கு. அந்தச் சின்னாம்பயலே காணும்..." என்று நீட்டிக் கொண்டே போனான் ரிக்ஷாக் கார ன். "அப்பா. அவன் பங்கஜத்தெ மாத்திரம் கூட்டிக் கிட்டே போரானே!" என்றாள் அலமு. பங்கஜம் எதிர் வீட்டு சப் ரிஜிஸ்திரார் குழந்தை. அது ரிக்ஷாவிலும் போகும், மோட்டாரிலும் போகும்! அந்த விஷயம் ரிக்ஷா வுக்குத்தான் புரியுமா, குழந்தைக்குத்தான் புரியுமா? அலமு ராத்திரிலே கொழந்தைகள் ரிக்ஷாவிலே போகப்படாதுடீ! எறங்கி வா!' என்று குழந்தையைத் தூக்கிக்கொண்டு. வாடிக்கைக் கடைக்காரனிடம் சென்றார் முருகதாசர். சொல்லிப் பிள்ளையவர்கள் கடையை எட்டு முன்பே, கடைக் காரன், "சாமி! இந்த மாதிரி யிருந்தாக்கட்டுமா? போன மாசத்திலே தீர்க்கலியே! நானும் சொல்லிச் பார்த்தாச்சு. பாக்கியை முடிச்சு, கணக்கெத் தீர்த்துடுங்க! எனக்குக் குடுத்துக் கட்டாது.நான் பொளைக்க வந்தவன்!' என்றான். 'நானும் பிழைக்க வந்தவன்தான். எல்லாரும் சாகவா வருகிறார்கள்! மின்னெ பின்னெதான் இருக்கும். நான் என்ன கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறேனா?" "போங்க சாமி! அது ஒண்ணுதான் பாக்கி!ரூ. 2-5-4 ஆச்சு; எப்ப வரும்?" "தீப்பெட்டியெக்குடு சொல்றேன்!