பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

78 புதுமைப்பித்தன் கதைகள் "பெட்டிக் கென்ன பிரமாதம்! இந்தாருங்க, எப்ப வரும்?” "எப்பவா? சம்பளம் நாளைக்குப் போட்ருவாங்கன்னு நினைக்கிறேன்; நாளை இல்லாவிட்டால் திங்கக்கிழமை. "திங்கக்கிழமெ நிச்சயந்தானே? நான் சீட்டுக் கட்ட ணும்!" என்றான். "சரி, பார்க்கிறேன்!" என்று திரும்பினார் தாசர். "பார்க்கிறேன்னு சொல்ல வேண்டாம், நிச்சயமாக வேண்டும்!" ஒரு கவலை தீர்ந்தது... அதாவது திங்கட்கிழமை வரை பாதி வழியில் போகையில், அப்பா!" என்றது குழந்தை. அவர் எதையோ நினைத்துக் கொண்டிருந்ததால், தன்னை யறியாமல் கொஞ்சம் கடினமாக, "என்னடி" என்றார். "நீதான் கோவிச்சுக்கிறியே,அப்பா! நான் சொல்ல மாட்டேன். போ!" ப 'கோவம் என்னடி, கோவம்! சும்மா சொல்லு?" "அதோ பார், பல்லு மாமா!" முருகதாசரின் நண்பர் சுப்பிரமணிய பிள்ளைக்குக் கொஞ்சம் உயர்ந்த பற்கள். அவை, வெளியே நீண்டு கொண்டு, தமது இருப்பை அனாவசியமாக உலகத்திற்கு அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் அலமு அவருக்கு இட்ட காரண இடுகுறிப் பெயர் அது. "எங்கடி" "அதோ பார், வீட்டு நடேலே! என்னை எறக்கி விடப்பா!" என்று, அவரது கையிலிருந்து வழுகி விடுவித் துக்கொண்டு, வீட்டிற்கு ஓட ஆரம்பித்தது. '"மெதுவா! மெதுவா!" என்றார் பிள்ளை; குழந்தையா கேட்கும்?