பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

பாம். ஒரு நாள் கழிந்தது 79 "மாட்டேன்!" என்றது. அதற்கப்புறம் ஏக களே பாவாடை தடுக்கியதோ என்னமோ! அலமு வலுக் கட்டாயமாக அங்கப் பிரதக்ஷணம் செய்ய ஆரம்பித்தாள். பிள்ளையவர்கள் ஓடிப்போய்க் குழந்தையை வாரி எடுத் தார். ஆனால் இவர் பதட்டத்திற்கு ஏற்ப, அங்கு குழந் தைக்கு ஒன்றும் ஏற்படவில்லை. "தோளுக்கு மேலே தொண்ணூறு தொடச்சுப் பாத்தா ஒண்ணுமில்லே!" என்று பாடிக் கொண்டு குழந்தை எழுந்தது. "என்ன ஸார், குழந்தையை நீங்க இப்படி விட லாமா?" என்று சொல்லிக் கொண்டே சுப்பிரமணியம் அவர்கள் பக்கம் வந்தார். "என்ன ஸார் செய்யட்டும்!என்ன சொன்னாலும் கேட்கிறதில்லை என்ற உறுதி மனசிலே ஏறிப்போயிருக்கு. வெளியிலே புறப்பட்டாச்சா. அப்புறம் தேடிக்கொண்டு பின்னோட பத்துப் பேர். இவளைக் கடைக்கனுப்பிச்சுட்டா தாயார். இவ்வளவு நேரம் அந்த ரிக்ஷாக்காரனோடே தர்க் கம் - என்ன செய்கிறது! வாருங்கள் ஸார், உள்ளே! ஒன் மினிட் ! விளக்கை ஏத்துகிறேன். குழந்தை அலமு அதற்குள் வீட்டிற்குள், "பல்லு மாமா வந்துவிட்டார்!" என்று பொதுவாக உச்ச ஸ்தாயி யில் விளம்பரம் செய்து கொண்டு ஓடிவிட்டாள். "குழந்தை துருதுருவென்று வருகிறதே! பள்ளிக்கூடத் திற்காவது அனுப்பக் கூடாதா" என்றார் நண்பர். "ஆமாம் ஸார்,தொந்தரவு சகிக்கலே. அங்கே தான் கொண்டு தள்ளணும். வயசு கொஞ்சம் ஆகட்டுமே என்று பார்க்கிறேன்" என்றார் முருகதாசர், விளக்குத் திரியை உயர்த்திக்கொண்டே. "நேத்து பீச்சுக்குப் போயிருந்தேன்! சுந்தரத்தைப் பார்த்தேன் ....." என்று ஆரம்பித்தார் என்று ஆரம்பித்தார் சுப்பிரமணிய பிள்ளை. அந்த ராஸ்கல் வந்துட்டானா! என்றைக்கும் அவன் தொல்லைதான் பெரிய தொல்லையாக இருக்கிறது. இங்கே