பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

ஒரு நாள் கழிந்தது 81 காப்பிபோடச் சொல்லட்டுமா? அலமும் அலமு?" என்று உரக்கக் கூவினார் முருகதாசர். எங்கிருந்தோ,"என்னப்பா!" என்று அலமுவின் குரல் வந்தது. f அம்மாவை மூணு கப் காப்பி போடச் சொல்லு. சீக்கிரம் ஆகணும் "நீ என்ன பத்திரிகையையே இப்பத்தான் கேள்விப்பட்டேன்." விட்டுவிட்டாயாமே! வயிற்றுப் பிழைப்பிற்கு எதில் இருந்தால் என்ன சீலைப்பேன் குத்துகிறதும் ஒரு 'பிஸினஸ்' ஆக இருந்து, அதில் ஒரு 'சான்ஸ்' கிடைத்தால், அதையும் விட்டா வைக்கிறது? நான் பத்திரிகையை விட்டுவிட்டா. கதை எழுதாமல் இருந்துவிடுவேனோ? ஒரு பெரிய நாவலுக்குப் பிளான் போட்டிருக்கேன். தமிழன்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், எனக்குக் காகிதம் வாங்கவாவது காசு கிடைக் கும். அதில் 'சென்ட்ரல் ஐடியா' என்ன தெரியுமா?......" "நீங்க நேற்றுப் பொருட்காட்சிக்குப் போனீர் சளாமே !" என்று பேச்சை மாற்ற முயன்றார் சுப்பிரமணிய பிள்ளை. இந்த விஷயத்தைத் தொட்டு விட்டால். முருகதாசர், கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் மாதிரி, விடாமல் திருப்பித் திருப்பி அதையே கதைத்துக் யித் கொண்டிருப்பார்! அப்பா!காப்பியாயிட்டுது. நீதான் வந்து எடுத்துக் கிட்டுப் போகணும்.சுடுது!" என்று சொல்லிக்கொண்டு, நிலைப்படி இரண்டு பக்கத்தையும் தொட்ட வண்ணமாய், ஒற்றைக் காலை ஆட்டிக்கொண்டு நின்றாள் அலமு. at அம்மா எங்கே?" அம்மா சாத்தெ வடிச்சிக்கிட்டிருக்கா, அப்பா?' "சரி! இதோ வாரேன், போ !" வாயேன்!' வர்ரேன்னா, போடீ உள்ளே "காப்பி ஆறிப்போயிடும், அப்பா?"